சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 9 ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், 8வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தோல்வியடைந்த ஹைதராபாத், அடுத்து நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணியுடன் குவாலிபையர் 2ம் போட்டியில் விளையாடி, மீண்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற முயற்சி செய்யும்.

2018ம் ஆண்டின் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று இன்று தொடங்கியது. 3 போட்டிகளாக நடக்கும் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சென்னை அணி, ஹைதராபாத் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

ஐதராபாத் அணியில் ஷிகர் தவான், கோஸ்வாமி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் தவான் க்ளீன் போல்டானார். அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். 4-வது ஓவரில் கோஸ்வாமி 12 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்த ஓவரில் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார்.
அதன்பின் சன்சரைசர்ஸ் ஐதராபாத்தின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. சாகிப் அல் ஹசன் 12 ரன்னிலும், மணிஷ் பாண்டே 8 ரன்னிலும், யூசுப் பதான் 24 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
18-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ப்ரத்வைட் இரண்டு சிக்சர் விளாசினார். இதனால் 17 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ப்ரத்வைட் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச சன்சைரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, சென்னை அணி 140 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டு பிளசிஸ் இறங்கினர். வாட்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இந்த ஆட்டத்திலும் ராயுடு டக் அவுட் ஆனார். நன்றாக விளையாடுகிறார் என்று கண்பட்டுவிட்டது போல…
ஐதராபாத் அணி துல்லியமாக பந்து வீசியது. இதனால் சென்னை அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன. ஒரு கட்டத்தில் சென்னை அணி தோல்வி உறுதி என்றே ரசிகர்கள் கருதினர். ஆனால்,  டு பிளசிஸ் மட்டும் ஓரளவு நிலைத்து நின்று அரை சதமடித்தார்.
இறுதியில், பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி

பெங்களூருக்கு 214 ரன்கள் இலக்கு

20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 213 எடுத்துள்ளது.

டாஸ் வென்ற பெங்களூரு, முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தது

ஐ.பி.எல்-ல் 9-வது லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கவுதம் கம்பிர், மும்பையை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளார். இரு அணிகளும் தாங்கள் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டிருப்பதால் இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பெற முனைப்புடன் களமிறங்கின.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவ் 53, ஏவின் லீவிஸ் 48 நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பை டெல்லியின் ராகுல் தேவாதியா பிரித்தார். இதற்கு பின் விளையாடிய இஷான் கிஷான் 44 ரன் சேர்த்தார். அதன் பின் அணி வீரர்கள் எவரும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழந்து 194 ரன் சேர்த்தது. தேவாதியா, பௌல்ட், கிறிஸ்டின் ஆகியோர் தலா 2 விக்கெட், ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய துவக்க வீரர் ஜேசன் ராயின் அதிரடியால், மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. 53 பந்துகளை சந்தித்த ஜேசன் ராய் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 91 ரன் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். இதன் மூலம், ஐ.பி.எல்-ல் முதல் வெற்றியை டெல்லி அணி பெற்றது. மும்பைக்கு இது மூன்றாவது தோல்வியாக அமைந்தது.

 

டப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் 2018ம் ஆண்டுக்கான முதல் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. (more…)