சென்னை அணி வெற்றிபெற 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப் அணி.

இன்று நடந்த கடைசி லீக் போட்டியில் சென்னை அணி பஞ்சாபை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி இன்று கொஞ்சம் சிறப்பாக பந்து வீசியது. வந்த வேகத்தில் கிரிஸ் கெயில் டக் அவுட் ஆனார். இதனால், பஞ்சாப் அணி ரன் குவிப்பது தவிர்க்கப்பட்டது. லோக்கேஷ் ராகுல், ஆரோன் ஃபின்ச் உள்ளிட்டவர்களும் ரன் குவிக்கத் தவறினர்.

மனோஜ் திவாரி (35), கருண் நாயர் (54) ரன்கள் எடுத்து அந்த அணி நல்ல ரன்களை எடுக்க உதவினர். கடைசியில், 19.4 ஒவரில் 153 ரன்னுக்கு பஞ்சாப் அணி ஆல் அவுட் ஆனது.

இன்றைய போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைய முடியும் என்ற நிலையில் பஞ்சாப் விளையாடி வருகிறது. ஆனால், தற்போது எடுத்துள்ள ரன்களை கணக்கிட்டால், சென்னை அணியை 100 ரன்னுக்குள் சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் உள்ளது. தொடக்கத்தில் அதிரடி காட்டிய பஞ்சாப் அணி புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருந்தது. கடைசியில், பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட நுழைய முடியாத நிலையில் இருப்பது பஞ்சாப் ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி!

டெல்லி ஹைலைட்ஸ்

ஓவர் 20: 198/5 – பதற்றமான கடைசி ஓவரை வீசிய நிகிடி, 14 ரன்கள் மட்டுமே கொடுத்து சென்னையின் வெற்றியை உறுதி செய்தார்.

ஓவர் 19: 184/5 – பிராவோ ஓவரில் விஜய் ஷங்கர் 3 சிக்ஸர்கள் அடித்து அசத்த, கடைசி ஓவரில் டெல்லிக்கு 28 ரன்கள் தேவை

ஓவர் 18: 163/5 – ரிஷப் பந்த் அவுட் 79(45) – யப்பாடா! – நிகிடி பந்துவீச்சில் ரிஷப் பந்த் ஒரு வழியாக அவுட்டானார்.

ஓவர் 17: 157/4 – 11 ரன்கள் – சென்னை பந்துவீச்சை தனி ஆளாக விளாசி வரும் ரிஷப் பந்த் இரண்டு பவுண்டரி அடித்தார்.

ஓவர் 16: 146/4 – 18 ரன்கள் – ரிஷப் பந்த் அரைசதம் – ஆசிப் மீண்டும் ரன்களை வாரி கொடுத்துள்ளார். ரிஷப் பந்த் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரி அடித்து, கடினமான நேரத்தில் டெல்லிக்காக அரைசதம் கண்டுள்ளார். ஹேட்ஸ் ஆப்!

ஓவர் 15: 128/4 – 11 ரன்கள் – பிராவோ பந்து வீச களமிறங்கியுள்ளார். ஷங்கர் ஒரு விளாசினார்.

ஓவர் 14: 117/4 – ரிஷப் பந்த் சிக்ஸர் அடிக்க, விஜய் ஷங்கர் பவுண்டரி அடித்தார்.

ஓவர் 13: 104/4 – ஜடேஜா ஓவரில் 7 ரன்கள். பந்த் 37(25),  ஷங்கர் 9(13)

ஓவர் 12: 97/4  – ஹர்பஜன் ஓவர் – 5 ரன்கள்

ஓவர் 11: 92/4 – அதிரடி காட்டிவரும் ரிஷப் பந்த், ஜடேஜா ஓவரில் சிக்ஸ் மற்றும் ஃபோர் அடித்தார்.

ஓவர் 10: 78/4 – ஹர்பஜன் மீண்டும் ஒரு அசத்தலான ஓவர் வீசி, 4 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.

ஓவர் 9: 74/4 – மேக்ஸ்வெல் அவுட் – அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லின் ஸ்டம்புகளை தாக்கினார் ஜடேஜா!

ஓவர் 8: 68/3 – சிறப்பாக பந்துவீசிய ஹர்பஜன் சிங் 4 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.

ஓவர் 7: 64/3 – கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன் அவுட் – 5 ரன்கள் கொடுத்து கட்டுப்படுத்தினார் ஜடேஜா. கடைசி பந்தில் ரன் ஓட முயற்சித்து டெல்லி வீரர்கள் குழம்ப, கேப்டன் ஸ்ரேயாஸ் ரன் அவுட்டானார்.

ஓவர் 6: 59/2 – வாட்சன் ஓவரில் ரிஷப் பந்த் ஒரு சிக்ஸ் மற்றும் ஃபோர் அடிக்க, பவர் பிளேவில், 59 ரன்கள் எடுத்துள்ளது டெல்லி.

ஓவர் 5: 46/2 – முன்ரோ அவுட் – ஆசிப்பிடம் இருந்து மீண்டும் ஒரு காஸ்டலியான ஓவர். இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்த முன்ரோ, கடைசி பந்தில்  கரண் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஓவர் 4: 31/1 – 14 ரன்கள் – வாட்சன் வீசிய முதல் ஓவரில், ஒரு சிக்ஸ் மற்றும் ஃபோர் அடித்தார்.

ஓவர் 3: 17/1 – மற்றொரு சூப்பர் நிகிடி ஓவர். 6 ரன்கள்.

ஓவர் 2: 11/1 – ஷா அவுட் – சென்னைக்காக தனது முதல் ஓவரை வீசிய ஆசிப், ஒரு வைடு, இரண்டு பவுண்டரி என மோசமாக துவங்கினாலும், ப்ரித்வி ஷாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஓவர் 1: 1/0 – சென்னை சூப்பர் கிங்க்ஸுக்காக தனது முதல் ஓவரை வீசிய நிகிடி, 1 1 ரன் மட்டும் கொடுத்துள்ளார்.

சென்னை ஹைலைட்ஸ் 

ஓவர் 20: 211/4 – ராயுடு ரன் அவுட் 41(24), தோனி அரைசதம் 51(22) – இந்த சீசனில் ராயுடு ரன் அவுட் ஆக வேண்டுமென்ற சாபம் வாங்கிவிட்டார் போல. மீண்டும் தேவையில்லாத ஒரு ரன் அவுட்.

ஓவர் 19: 198/3 – அவேஷ் கான் பந்தில் தோனியின் கேட்ச் மிஸ். அதற்கு தண்டனையாக கடைசி பந்தில் ஒரு சிக்ஸ். மொத்தம் 11 ரன்கள்

ஓவர் 18: 187/3 – ராயுடு இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடிக்க, இந்த ஓவரில் மொத்தம் 17 ரன்கள்.

ஓவர் 17:  170/3 – 21 ரன்கள் அடேங்கப்பா! – போல்ட் பந்தில் இரண்டு சிக்ஸர், ஒரு ஃபோரை தோனி அடிக்க,தன் பங்குக்கு ராயுடு ஒரு பவுண்டரி அடித்தார்

ஓவர் 16: 149/3 – தோனி அதிரடியை துவக்கி விட்டார். மிஸ்ரா பந்தில் ஒரு சிக்ஸ்

ஓவர் 15: 137/3

ஓவர் 14: 131/3 – வாட்சன் அவுட் 78(40) – மிஸ்ரா மீண்டும் சிறப்பாக பந்துவீசி 8 ரன்கள் கொடுத்து முக்கியமான வாட்சன் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். தோனி களமிறங்கியுள்ளார்.

ஓவர் 13: 123/2 – 15 ரன்கள் – விஜய் ஷங்கர் வீசிய இந்த ஓவரில், ராயுடு இரண்டு மற்றும் வாட்சன் ஒரு பவுண்டரி அடித்தனர்.

ஓவர் 12:  ரெய்னா அவுட் 1(2) – 5 ரன்கள், 1  விக்கெட் – பந்துவீச வந்த மேக்ஸ்வெல், முதல் பந்திலேயே ரெய்னாவை போல்டாக்கினார்.

ஓவர் 11: டு பிளேஸிஸ் அவுட் 33(33) – விஜய் ஷங்கர் வீசிய அருமையான ஓவரில், பவுண்டரிகள் எதுவும் அடிக்க விடாமல், டு பிளேஸிஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

ஓவர் 10: 96/0 – மிஸ்ரா மீண்டும் சிறப்பாக பந்துவீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.

ஓவர் 9: 91/0 – வாட்சன் அரைசதம் – தேவாதியா பந்தில் மீண்டும் இரண்டு சிக்ஸர் அடித்து ஸ்டைலாக அரைசதம் கண்டார். வாட்சன் ட்ரெயினை தடுக்க இன்று யாருமில்லை!

ஓவர் 8: 76/0 – 5 ரன்கள்

ஓவர் 7: 71/0 – 15 ரன்கள் – தொடர்ந்து அதிரடி காட்டிவரும் வாட்சன் மீண்டும் ப்ளுன்கேட் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்.

ஓவர் 6: 56/0 – 11 ரன்கள்

ஓவர் 5: 45/0 – 20 ரன்கள் – ப்ளுன்கேட் பந்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து வாட்சன் தெறிக்கவிட, டு பிளேஸிஸ் ஒரு சிக்ஸர் அடித்தார்.

ஓவர் 4: 25/0 – 9 ரன்கள்

ஓவர் 3: 16/0 – 9 ரன்கள் – வாட்சன் மற்றும் டு பிளேஸிஸ் ஆளுக்கொரு பவுண்டரி அடித்துள்ளனர்.

ஓவர் 2: 7/0

ஓவர் 1: 6/0 – 6 ரன்கள் – துவக்க வீரர்களாக டு பிளேஸிஸ் மற்றும் வாட்சன் களமிறங்கியுள்ளனர்.

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை இன்று எதிர்க்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். பஞ்சாப்பிடமும், மும்பையிடம் வெற்றியை பறிக்கொடுத்த சி.எஸ்.கே டெல்லிக்கு வெற்றியை விட்டுக்கொடுக்குமா? இல்லை தட்டிப்பறிக்குமா? என்பது ரசிகர்களின் சர்ப்பரைஸ் எதிர்பார்ப்பாகவுள்ளது.

11 வது ஐ.பி.எல் தொடரில், 7 போட்டிகளை சந்தித்த சென்னை அணி, அதிரடியான ஆட்டத்தால் 5 போட்டிகளில் வெற்றி தடம் பதித்தது. மும்பை, பஞ்சாப்பிடம் தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே இன்று நடைபெறும் போட்டியில் தோல்வியை சமாளித்து மீண்டு வருமா என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது. பிராவோ, வாட்ஸன், ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி என பல துடுப்பான ஆட்டகாரர்கள் வசம் சி.எஸ்.கே இருந்தாலும் கடந்த வெள்ளியன்று மும்பைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவியது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சாஹருக்கு பதிலாக இங்கிலாந்தின் லுங்கிசனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 7 போட்டியில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசியாக இருக்கிறது. புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்ற பின், அந்த அணி கொல்கத்தாவை வீழ்த்தியுள்ளது. அதன்பின் சென்னையுடன் விளையாட களமிறங்குவது குறிப்பிடதக்கது. இந்த சீசனில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதுவது இதுதான் முதல்முறை என்பதால் எதிர்ப்பார்ப்பு மேலும் வலுத்துள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி: ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), கிறிஸ் மோரிஸ், ரிஷாப் பந்த், க்ளென் மேக்ஸ்வெல், ஜேசன் ராய், கொலின் முன்றோ, முகமது ஷமி, காகிஸோ ரபாடா, அமித் மிஸ்ரா, ப்ரித்வி ஷா, ராகுல் தேவாதியா, விஜய் ஷங்கர், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், ஷாபாஸ் நதீம், டேனியல் கிறிஸ்டின், ஜெயந்த் யாதவ், குர்கீரத் சிங் மான், ட்ரெண்ட் பௌல்ட, மஞ்சோத் கல்ரா, அபிஷேக் சர்மா, சந்தீப் லாமிச்சனே, நமன் ஒஜ்ஹா, ஸயன் கோஷ், கவுதம் கம்பிர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ். தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ், ஹர்பஜன் சிங், ட்வயன் பிராவோ, ஷான் வாட்சன், அம்பதி ராயுடு, தீபக் சாகர், கே.எம். ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கிசனி ங்கிடி, துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், க்ஷிதிஸ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்ணோய், இம்ரான் தாஹிர், கார்ன் சர்மா, ஷர்துல் தாகூர், என். ஜெகதீசன், டேவிட் வில்லி. காயம் காரணமாக இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ள தீபக் சாகருக்கு பதிலாக லுங்கிசனி ங்கிடி விளையாடவுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

மும்பை இந்தியன்ஸ், சென்னை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இன்று புனேவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற, மும்பை அணி, முதலில் சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தது. சென்னை வீரர்கள் ரன் குவிக்கத் திணறினர்.

சென்னை அணி 26 ரன்கள் எடுத்த நிலையில் ஷேன் வாட்சன் அவுட் ஆனார். அதன்பிறகு, ராயுடு நிலைத்து நின்று ஆடினார். அவர் 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சென்னை அணி 100 ரன் தாண்டுவதற்குள்ளாகவே இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன்பிறகு, ரெய்னாவுடன் தோனி ஜோடி சேர்ந்து ஆடினார். அதைத் தொடர்ந்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் பிராவோ முட்டை மட்டுமே எடுத்து பேரதிர்ச்சியை கொடுத்தார்.

கடைசி ஓவரில் ரன் குவிப்பார்கள் என்று சென்னை வீரர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், கிடைத்ததோ விக்கெட் மட்டுமே. சாம் பில்லிங்ஸ் 19.4 ஓவரில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். கடைசியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில்  ஐந்து விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுரேஷ் ரெய்னா கடைசி வரை ஆட்டம் இழக்காமல் சென்னை அணி ரன் குவிக்க உதவினார்.

அதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. மும்பை வீரர்களின் விக்கெட்களை வீழ்த்த சென்னை அணியின் எல்லா முயற்சியும் வீணானது. கடைசியில், 19.4 ஓவரில், வெறும் இரண்டு விக்கெட்களை மட்டும் இழந்து மும்பை அணி 173 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த மும்பை ரசிகர்களுக்கு இந்த வெற்றி ஆறுதலை அளித்துள்ளது. தோல்விப் பாதையில் இருந்து மீண்டுவிட்ட நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி 

ஹைலைட்ஸ்

ராஜஸ்தான் இன்னிங்ஸ்

ஓவர் 18.3 – 140/10 – உனத்கத் மற்றும் லக்ஹ்லின் அவுட் – இருவர் விக்கெட்டையும் அடுத்தடுத்து கரண் ஷர்மா வீழ்த்த, 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ராஜஸ்தான்.

ஓவர் 17 – 130/8 – 9 ரன்கள் – மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார் ஜெயதேவ் உனத்கத்

ஓவர் 16 – பின்னி அவுட் – 121/8 – “கேட்ச் ஆப் தி மேட்ச்” – ஷர்துல் தாகூர் வீசிய பந்து பின்னியின் பேட்டில் பட்டு எகிற, அதை பாய்ந்து விழுந்து சூப்பர் கேட்ச் பிடித்தார்.

ஓவர் 15 – கௌதம் அவுட் – 115/7 – சதம் அடித்த வாட்சன் பந்தில் ஒரு விக்கெட். ஷார்ட் பந்தை வாட்சன் வீச, அதை கௌதம் பின்னல் அடிக்க முயற்சி செய்து, தோனியிடம் கேட்ச் கொடுத்தார்.

ஓவர் 14 – ஸ்டோக்ஸ் அவுட் – 111/6 -இம்ரான் தாஹிர் பந்தில் சிக்ஸ் அடித்த ஸ்டோக்ஸ், மற்றொரு சிக்ஸுடன் அரைசதம் அடிக்க முயற்சி செய்ய, அதை பவுண்டரி அருகே பில்லிங்ஸ் பிடித்தார்.

ஓவர் 13 – திரிபாதி அவுட் – 96/5 – மீண்டும் பிராவோவின் ஸ்லோ பாலில் திரிபாதி தூக்கி அடிக்க, அதை பில்லிங்ஸ் கேட்ச் பிடித்தார்.

ஓவர் 12 – 94/4

ஓவர் 11 – பட்லர் அவுட் – 84/4 – பிராவோ வீசிய ஸ்லோ பாலில், பட்லர் அடித்த பந்தை, தாஹிர் கேட்ச் பிடித்தார்.

ஓவர் 10 -77/3

ஓவர் 9 – 67/3

ஓவர் 8 – 57/3 – தாஹிரின் ஓவரில் பட்லர் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தார். 38 பந்துகளுக்கு பின், இப்போது தான் ராஜஸ்தான் அணி பவுண்டரி அடித்துள்ளது.

ஓவர் 7 – 43/3 – 8 ரன்கள்

ஓவர் 6 –  35/3 – பிரஷரை சரியாக உபயோகப்படுத்திக் கொண்ட வாட்சன், இந்த ஓவரில் வெறும் ஒரு ர்ன் மட்டுமே கொடுத்தார். பவர் பிளே முடிவில் ராஜஸ்தான் 35 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ஓவர் 5 – 34/3 – ரஹானே அவுட் – மீண்டும் சஹார். சூப்பரான நக்ல் பால் போட, கேப்டன் ரஹானே அவசரப்பட்டு வெளியே வந்து போல்டானார்.

ஓவர் 4 – 31/2 – 6 ரன்கள்

ஓவர் 3 – சஞ்சு சேம்சன் அவுட் -சஹார் வீசிய அருமையான ஷார்ட் பாலை பவுண்டரிக்கு அடிக்க முயற்சி செய்ய, கரண் ஷர்மா கேட்ச் பிடித்தார். ஆபத்தான சேம்சன் பெவிலியன் திரும்பினார்.

ஓவர் 2 – க்ளாஸன் அவுட் – 6 ரன்கள், 1 விக்கெட்; தாகூரின் பந்தில், க்ளாஸனின் மிடில் ஸ்டம்ப் சிதறியது.

ஓவர் 1 – 14 ரன்கள் – அருமையாக பந்து வீசிய சஹாருக்கு லக் இல்லை. வாட்சன் ஒரு கேட்சை மிஸ் செய்ய, பின் ரஹானே ஒரு சிக்ஸ் மற்றும் ஃபோர் அடித்தார்.

சென்னை இன்னிங்ஸ் 

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து சென்னை

ஓவர் 20 – 8 ரன்கள் – வாட்சன் அவுட் – லக்ஹ்லின் வீசிய கடைசி பந்தில், கீப்பரிடம் கேட்ச் கொடுத்த அவுட்டானார் வாட்சன். 

ஓவர் 19 – 12 ரன்கள்  – இரண்டு பவுண்டரிகள் அடித்தார் பிராவோ

ஓவர் 18 – 184/4 – வாட்சன் சதம் – 9 ரன்கள் – ஷேன் வாட்சன் சதம். வெறும் 51 பந்துகளில் சதமடித்து கலக்கல் இன்னிங்ஸ் விளையாடியுள்ளார் வாட்சன். ஐபிஎல்லில் வாட்சன் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும்.

ஓவர் 17 – 175/4 – 10 ரன்கள்

ஓவர் 16 – 165/4 –  பில்லிங்ஸ் அவுட் – கோபால் ஓவரில் மற்றொரு விக்கெட். சாம் பில்லிங்ஸை வீழ்த்தினார். 4 ஓவர்களில் ஷ்ரேயாஸ் கோபால் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்துள்ளார்.

ஓவர் 15 – 161/3 – 8 ரன்கள்

ஓவர் 14 – 152/3 – 3 ரன்கள், 1 விக்கெட்

ஓவர் 13.2- 151/3 – தோனி அவுட் – கோபால் வீசிய இந்த ஓவரில் பவுண்டரி அடிக்க முயன்ற தோனியை, கவுதம் சூப்பர் கேட்ச் பிடித்து வெளியேற்றினர்.

ஓவர் 13 – 150/2 – 19 ரன்கள் – பின்னி வீசிய இந்த ஓவரில் வாட்சன் 3 ஃபோர் அடிக்க, தோனி தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார்.

ஓவர் 12 – 131/2 – ரெய்னா அவுட் – இரண்டு பவுண்டரி அடித்த ரெய்னா, 46 ரன்களில் சிக்ஸ் முயற்சி செய்து, விக்கெட்டை பறிகொடுத்தார். அரைசத வாய்ப்பையும் இழந்தார்.

ஓவர் 11 – 122/1 -15 ரன்கள் – ரெய்னா பவுண்டரி அடிக்க வாட்சன் சிக்ஸ் விளாசி லக்ஹ்லினை மீண்டும் கலங்கடித்தனர்.

ஓவர் 10 – 107/1 – 10 ரன்கள் – ரெய்னா இரண்டு பவுண்டரி அடிக்க, சென்னை 100 ரன்களை 9.5 ஓவர்களில் தொட்டது.

ஓவர் 9 – 97/1 – வாட்சன் அரைசதம் – இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி என அதிரடி காட்டிய வாட்சன், சிஎஸ்கே அணிக்காக தனது முதல் அரைசதத்தை 28 பந்துகளில் பதிவு விளாசியுள்ளார். 

ஓவர் 8 – 78/1 – 4 ரன்கள்

ஓவர் 7 – 74/1 – 5 ரன்கள்

ஓவர் 6 – 69/1 – 16 ரன்கள் – தொடர்ந்து 4 பவுண்டரிகள் அடித்து அசத்தினார் சுரேஷ் ரெய்னா.

ஓவர் 5 – 53/1 – ராயுடு அவுட் – 5 ரன்கள், 1 விக்கெட் – லக்ஹ்லின் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார் ராயுடு.

ஓவர் 4 – 48/0 – 11 ரன்கள்

ஓவர் 3 – 37/0 – 12 ரன்கள் – இரண்டு சிக்ஸர் – வாட்சன் மீண்டும் அதிரடி

ஓவர் 2 –  25/0 – 11 ரன்கள்

ஓவர் 1 – 14/0 – பின்னி வீசிய முதல் ஓவரில் வாட்சன் 2 பவுண்டரியும்,  ராயுடு ஒரு பவுண்டரியும் அடித்து, சூப்பர் துவக்கம் கொடுத்துள்ளனர்.

 

ராஜஸ்தானில், ஷார்ட் மற்றும் தவாலை வெளியேற்றி, க்ளாஸான் மற்றும் பின்னி சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை அணியில் ஹர்பஜன், முரளி விஜய் வெளியேற்றப்பட்டு, ரெய்னா, கரண் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளனர்.

11-வது ஐ.பி.எல் போட்டியில் இன்று நடக்கும் 17-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. புனேவில் உள்ள எம்.சி.ஏ மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. சி.எஸ்.கே களமிறங்கிய மூன்று போட்டிகளும் மிகவும் த்ரில்லிங்கான மேட்ச்சாக அமைந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் கேப்டன் தோனி, ஐ.பி.எல்-ல் தனது சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். பேட்டிங்கில் நிலையாக இருந்தாலும் அணியின் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாக உள்ளது.

காயத்தில் இருந்து தோனி மீண்டு, களத்தில் இறங்குவார் என்று பயிற்சியாளர் ஹஸ்ஸி நம்பிக்கை தெரிவித்திருந்தார். இன்றைய போட்டியிலும் ரெய்னா விளையாடுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடுமையான காயம் ஏற்பட்டிருந்தாலும் ரெய்னா வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் காயத்தின் தன்மை பொருத்தே அவர் களமிறங்குவார். அணியில் புதிதாக இடம் பெற்றுள்ள டேவிட் வில்லிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கார்ன் சர்மாவுக்கு, தாஹிர் அல்லது ஹர்பஜன் வழி விட்டு வாய்ப்பு கொடுக்கலாம்.

ஹோம் கிரவுண்டை பொருத்தவரை சுமார் ஆயிரம் சி.எஸ்.கே ரசிகர்கள் புனேவுக்கு சென்றடைந்துள்ளனர். சென்னையில் இல்லாவிட்டாலும் புனேவில் போட்டியை கண்டு ரசிக்க நேற்று அவர்களுக்கு சிறப்பு ரயிலை அணி நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்தது.

அஜின்க்யா ரஹானே தலைமையில் களமிறங்கும் ராஜஸ்தான், நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றியை பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இந்த அணியின் பந்துவீச்சு சராசரி மோசமாக இருப்பதால், அதனை சரிசெய்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் இருக்கிறது. அணியில் ஷார்ட்டுக்கு பதில் க்ளாஸென் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பென் ஸ்டோக்ஸ் இன்னும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஐ.பி.எல்-ல் இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில், சி.எஸ்.கே 11 வெற்றிகளையும், ராஜஸ்தான் 6 வெற்றிகளையும் பெற்றுள்ளது. புனே மைதானத்தில், சி.எஸ்.கே 1 வெற்றி 1 தோல்வியை கண்டுள்ளது. அதே போல் ராஜஸ்தான் இந்த மைதானத்தில் 2 வெற்றி 2 தோல்வியை சந்திருக்கிறது.

இரு அணிகளும் மூன்றாவது வெற்றிக்காக பாடுபடுவார்கள். அதே சமயம், இரு அணிகளும் சூதாட்ட விவகாரத்தில் தடை பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மோத இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ். தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ், ஹர்பஜன் சிங், ட்வயன் பிராவோ, ஷான் வாட்சன், கேதார் ஜாதவ், அம்பதி ராயுடு, தீபக் சாகர், கே.எம். ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கிசனி ங்கிடி, துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், க்ஷிதிஸ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்ணோய், இம்ரான் தாஹிர், கார்ன் சர்மா, ஷர்துல் தாகூர், என். ஜெகதீசன்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: அஜின்க்யா ரஹானே (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஸ்டுவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ராகுல் த்ரிபாதி, டி ஆர்சி ஷார்ட், கிருஷ்ணப்பா கெளதம், ஜோஃப்ரா அர்ச்சர், தவள் குல்கர்னி, ஜெயதேவ் உனட்கட், அங்கித் சர்மா, அனுரீத் சிங், ஜாகிர் கான், ஷ்ரேயாஸ் கோபால், பிரஷாந்த் சோப்ரா, சுதேசன் மிதுன், பென் லக்ஹ்லின், மஹிபால் லொம்ரோர், அர்யமான் பிர்லா, ஜதின் சக்சேனா, துஷ்மந்தா சமீரா, ஹெய்ன்ரிச் க்ளாஸென்.