14 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது பெங்களூரு

பெங்களூருவை கிழித்து தொங்கவிட்ட சி.எஸ்.கே!

 

சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைலைட்ஸ்

ஓவர் 19.4 – தோனி சிக்ஸ்  – சென்னை வெற்றி – 207/5

ஓவர் 19.2 – பிராவோ சிக்ஸர் – 4 பந்துகளில் 6 ரன்கள்

ஓவர் 19.1 – பிராவோ பவுண்டரி – லக்கி ஸ்ட்ரைக் –  5 பந்துகளில் 12 ரன்கள்

ஓவர் 19 – 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை…

18.5 – தொடர்ந்து மூன்று வைடு வீசினர் சிராஜ். 7 பந்துகளில் 18 ரன்கள்.

தோனி  சிக்ஸர் : 7 பந்துகளில் 21 ரன்கள்

8 பந்துகளில் 27 ரன்கள் …முடியுமா சிஎஸ்கே?

ஓவர் 18 – 176/5 – ராயுடு அவுட் 82(53) – கோரி ஆண்டர்சன் ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், திடீரென ராயுடு இரண்டு ரன் ஓட முயற்சித்து ரன் அவுட்டானார்.

 

தோனி 29 பந்துகளில் அரைசதம்

ஓவர் 17 – 161/4

ஓவர் 16 – 151/4 – பாவம் ஆர்சிபி. ராயுடு கொடுத்த கேட்சை உமேஷ் யாதவ் தவற விட, அடுத்து 2 சிக்ஸர்கள் அடித்தார் ராயுடு. பந்துவீசிய ஆண்டர்சன் கடுப்பில் திரும்புகிறார்.

ஓவர் 15 – 135/4 – 9 ரன்கள் – மீண்டும் ஒரு சிக்ஸ். சிக்ஸர்கள் மட்டுமே அடித்து வருகிறார் ராயுடு 61(44).

ஓவர் – 14 – 126/4 – ராயுடு அரைசதம் 54(41) – பவன் நெகியின் ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்கள் அடிக்க, ராயுடு ஒரு சிக்ஸ் அடித்து, அரைசதம் கண்டார்.

ஓவர் 13  – 107/4 – சஹால் தொல்லை முடிந்தது. மறுபடியும் பெங்களூருக்கு ஒரு நல்ல ஓவர். 4 ஓவர்களில் சஹால் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை எடுத்துள்ளார்.

ஓவர் 12 – 101/4 – சிக்ஸரோடு சென்னைக்கு 100 ரன்களை கொண்டு வந்தார் தோனி

ஓவர் 11 – 90/4 – சஹால் மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் போட்டு, ரன்களை கட்டுப்படுத்தியுள்ளார். கிடைத்த ப்ரீ ஹிட் வாய்ப்பை, ராயுடு வீணாக்கினார்.

ஓவர் 10 – 83/4 – 9 ரன்கள் – தோனி வந்த இரண்டாவது பந்தே சிக்ஸர். ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறார் நம்ம கேப்டன். அரைசதத்தை நெருங்குகிறார் ராயுடு 44(31).

ஓவர் 9 – 74/4 – ஜடேஜா அவுட் 3(5) – மீண்டும் சஹால் – ஜடேஜாவை போல்டாக்கினார். ‘தல’ தோனி களமிறங்கிவிட்டார்.

ஓவர் 8 – 66/3 – யாதவ் வெறும் 5 ரன்கள் மட்டும் கொடுத்துள்ளார்.

ஓவர் 7 – 61/3 – 6 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் சஹால். இந்த சீசன் ஜடேஜா கடைசியாக இறங்கி சரியாக பேட்டிங் பிடிக்காததால், தோனி அவரை சீக்கிரமே இறக்கி விட்டிருக்கிறார்.

ஓவர் 6.2 – 59/3 – பில்லிங்ஸ் அவுட் – சஹால் வீசிய பந்தில் அவசரப்பட்டு வெளியே வந்த பில்லிங்க்ஸை, டி காக் ஸ்டம்பிங் செய்தார்.

ஓவர் 6 – 55/2

ஓவர் 5.1 – 50/2 – ரெய்னா அவுட் 11(9) – உமேஷ் யாதவ் பந்தில் லெக் சைடில் அடிக்க ரெய்னா முயற்சிக்க, எட்ஜ் ஆகி மந்தீப் சிங் கேட்ச் பிடித்தார்.

ஓவர் 5 – 50/1 – சிராஜ் ஓவரில் ராயுடு மூன்று பவுண்டரி. சென்னை 50 ரன்களை தொட்டது.

ஓவர் 4 – 35/1 – இந்த முறை யாதவ் பந்தில் ரெய்னா ஒரு பவுண்டரி அடிக்க, ராயுடு மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தார்.

ஓவர் 3 – 24/1 – வாஷிங்க்டன் சுந்தர் ஓவரில் இரண்டு சிக்ஸர். ராயுடு அதிரடி!

ஓவர் 2 – 10/1 – உமேஷ் யாதவ் சூப்பராக பந்துவீசி 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

ஓவர் 1 – 8/1 – வாட்சன் அவுட்  7(4) – நெகி வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்து அதிரடியை துவக்க முயற்சித்த வாட்சன் அடுத்த பந்திலேயே அவுட்டானார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 206 ரன்கள் இலக்கு 

 

 

பெங்களூரு ஹைலைட்ஸ்

ஓவர் 20 – 205/8 – 14 ரன்கள் – கடைசியாக வந்த வாஷிங்க்டன் சுந்தர், சிக்ஸ் ஃபோர் அடித்து, பெங்களூரு 200-ஐ கடக்க உதவினார்.

ஓவர் 19.3 – 192/8 – உமேஷ் யாதவ் அவுட்  ஈசல் போல விழுகிறார்கள் பெங்களூரு வீரர்கள். ஒரு வைட் வீசிய பிராவோ அடுத்த பந்திலேயே உமேஷ் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஓவர் 19.2 – 192/7 – பவன் நெகி ரன் அவுட் 

ஓவர் 19.1 – 191/6 – கிராண்ட்ஹோம் ரன் அவுட்

ஓவர் 19 – 191/5 – மந்தீப் சிங் அவுட் 32(17) – இரண்டு சிக்ஸர்கள் அடித்த மந்தீப் தாகூரின் கடைசி பந்தி அவுட்டானார்.

ஓவர் 18  –  173/4 – பிராவோ மீண்டும் ஒரு அசத்தல் ஓவர் வீசி 9 ரன்கள் மட்டும் கொடுத்துள்ளார். மந்தீப் 17(12), கிராண்ட்ஹோம் 10(6)

ஓவர் 17 – 164/4 – 7 ரன்கள் மட்டுமே. தாஹிர் பந்தில் யாரும் ரிஸ்க் எடுக்கவில்லை. அந்த பயம் இருக்கட்டும்!

ஓவர் 16 – 157/4 – மந்தீப் சிங் ஒரு சிக்ஸர் மற்றும் ஃபோர் அடித்து, டி வில்லியர்ஸ் விட்டுச் சென்றதை தொடரப் பார்க்கிறார்.

ஓவர் 15 – 142/4 – கோரி ஆண்டர்ஸன் அவுட் – இம்ரான் தாஹிர் பந்தில் டி வில்லியர்ஸும், அடுத்து வந்த மற்றொரு அதிரடி வீரர் ஆண்டர்சனும் அவுட்டானார்கள். திருப்புமுனை!

ஓவர் 14.5 – 142/3 – டி வில்லியர்ஸ் அவுட் 68(30)

ஓவர் 14 – 138/2 – வாட்டே ஓவர்…இக்கட்டான சூழ்நிலையில், ஒரு ரன் கூட கொடுக்காமல், விக்கெட்டையும் வீழ்த்தினார் பிராவோ.

ஓவர் 13.1 – 138/2 – டி காக் அவுட் – 53(37)

ஓவர் 13 – 138/1 –  என்னடா நடக்குது இங்க….? ஹேட்ரிக் சிக்ஸர்களோடு அரைசதம் அடித்தார் டி வில்லியர்ஸ் 66(26).

ஓவர் 12 – 118/1 – சிக்ஸோடு அரைசதம் அடித்தார் டி காக் 52(35)

(தோனி மைண்ட் வாய்ஸ்) கோலியாவது ஃபோர் தான் அடிச்சிக்கிட்டு இருந்தான். அவசரப்பட்டு அவுட் ஆகிட்டோமோ?

ஓவர் 11 – 106/1 – மரண அடி – டி காக் 43(31), டி வில்லியர்ஸ் 45(20) –  தாஹிர் ஓவரில் இரண்டு சிக்ஸர் ஒரு ஃபோர் அடித்தார் டி வில்லியர்ஸ். இரண்டு பேட்ஸ்மேன்களும் அரைசதத்தை நெருங்கியுள்ளனர்.

ஓவர் 10 – 87/1 – டி காக் 41(30), டி வில்லியர்ஸ் 28(15) – பிராவோவின் முதல் ஓவரில் 10 ரன்கள் கொடுத்துள்ளார்.

ஓவர் 9 – 77/1 – இந்த சீசன் விட்டு விட்டு பாமில் வரும் இம்ரான் தாஹிர், அருமையாக பந்து வீசி வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சென்னை பீல்டிங் இன்னிக்கு செம!

ஓவர் 8 – 72/1 – வாட்சன் தனது முதல் ஓவரை வீசினார். 9 ரன்கள்

ஓவர் 7 – 63/1 – டி காக் 22(16), டி வில்லியர்ஸ் 23(11) – ஜடேஜா வீசிய இந்த ஓவரில் மீண்டும் டி வில்லியர்ஸ் சிக்ஸ் அடிக்க, 11 ரன்கள் எடுத்து பெங்களூரு.

ஓவர் 6 – 52/1 – ஹர்பஜன் ஓவரில் டி வில்லியர்ஸ் சிக்ஸ், சிக்ஸ், ஃபோர் என கலங்கடித்து விட்டார். நல்ல வேளை பவர் பிளே முடிந்தது!

ஓவர் 5 – 35/1 – கோலி அவுட் – 18(15) – எந்த ரன்னும் கொடுக்காமல், கோலியின் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் சூப்பர் சஹார்.

ஓவர் 4 – 35/0 – 7 ரன்கள் – ஹர்பஜன் வீசிய இந்த ஓவரில் டி காக் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார்.

ஓவர் 3 – 28/0 – 15 ரன்கள் – அதிரடியை தொடரும் கோலி, மீண்டும் ஒரு பவுண்டரி அடிக்க, டி காக் சிக்ஸ் அடித்து சஹாருக்கு மேலும் நெருக்கடி கொடுத்தார்.

ஓவர் 2 – 13/0 – தாகூர் ஓவரில் மேலும் ஒரு ஃபோர். கோலி தனது சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார்

ஓவர் 1 – 5/0 – சஹார் வீசிய முதல் ஓவரில் கோலி  ஒரு ஃபோர் அடித்தார்.

டாஸ் வென்ற சிஎஸ்கே பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், 6வது இடத்தில் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது.

19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு  அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில், ஒரு போட்டியில் வெற்றியையும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளன.

பெங்களுரு சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. எனவே பேட்டிங்கில் சிறந்த வீரர்களான மெக்கலம், கோலி, டிவில்லியர்ஸ், டிகாக் போன்றவர்கள் உள்ள பெங்களூரு  அணிக்கு இன்று நல்ல நாள் எனலாம். கடைசி போட்டியில் வெற்றி பெற்று இருந்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. எனவே இந்த போட்டியில் அதை சரி செய்து விளையாட முயற்சிக்கும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக எப்போதும் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர் டி வில்லியர்ஸ். மேலும் விராத் கோலி இதுவரை ஆடிய இரண்டு போட்டியிலும் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை எனவே இன்று தனது சுயரூபத்தைக் காட்ட முயற்சிப்பார். சுழற்பந்து வீச்சில் வீக்காக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது மிக பெரிய தலைவலியாக இருக்கும்.

அதே போல ராஜஸ்தான் அணியில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜெய்தேவ் உனத்கட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்த்த பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

கடந்த இரண்டு போட்டிகளில் ரஹானே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே ராஜஸ்தான் அணியின் பேட்டிங் லைன்அப்பில் சொல்லிக்கொள்ளும்படி செயல்பட்டு வருகின்றனர்.

இன்று பேட்டிங்கில் சிறந்து விளங்கும் அணி ஐபிஎல் 2018 லீக் போட்டியில் தனது இரண்டாவது வெற்றியை பெறும்.

இந்த இரு அணிகளும் இதுவரை 16 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 8 போட்டிகளில் பெங்களுரு அணியும் 7 போட்டிகளில் ராஜஸ்தான் அணியும் வென்றுள்ளது.

மேலும் இரு அணிகளும் சின்னசாமி மைதானத்தில் மோதிக்கொண்ட 6 போட்டிகளில் 2ல் பெங்களுருவும் 3 ராஜஸ்தானும் வென்றுள்ளது.

4 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி

பெங்களூரு இன்னிங்ஸ்

ஓவர் 19.3 – 159/6 – பெங்களூரு வெற்றி

கடைசி 6 பந்துகளில் 5 ரன்கள் தேவை. மோஹித் ஷர்மா பவுலிங்

ஓவர் 18.4 – 150/6 – மந்தீப் சிங் அவுட் – ரன் அவுட்டானார் பெங்களூரு அணியின் கடைசி டேஞ்சர் மேன் மந்தீப் சிங். 

ஓவர் 18.1 – 146/5 – டி வில்லியர்ஸ் அவுட் – டியே பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டனர் அதிரடி மன்னன் ஏ.பி டி. 11 பந்துகளில் 10 ரன்கள் தேவை

ஓவர் 17.2 – 141/4 – டி வில்லியர்ஸ் அரைசதம் – ஹேட்ரிக் சிக்ஸர்கள் அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார் டி வில்லியர்ஸ்.

ஓவர் 17 – 134/4 – டி வில்லியர்ஸ் அதிரடி – இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என மொத்தம் இந்த ஓவரில் 19 ரன்கள்

பெங்களூருக்கு 4 ஓவர்களில் 41 ரன்கள் தேவை – டி வில்லியர்ஸ் (34), மந்தீப் சிங்(11) களத்தில்.

ஓவர் 11.3 – 87/4 – சர்பராஸ் கான் டக்கவுட் – அஷ்வினின் அடுத்த பந்திலேயே ஸ்லிப்பில் நின்ற நாயரிடம் கேட்ச் கொடுத்தார் கான்.

ஓவர் 11.2 – 87/3 – டி காக் அவுட் – நல்ல துவக்கம் தந்த டி காக்(45), அஷ்வின் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

ஓவர் 4.5 – 33/2 – கோலி அவுட் – மிகவும் ஆபத்தான கோலியை கூக்லி போட்டு போல்டாக்கினார் முஜீப் ரஹ்மான்.

ஓவர் 0.2 – 0/1 – மெக்குல்லம் அவுட் – அக்சர் பட்டேல் போட்ட இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார் அதிரடி பேட்ஸ்மேன் மெக்குல்லம்.

பெங்களூருக்கு 156 ரன்கள்  இலக்கு!

பஞ்சாப் இன்னிங்ஸ்

ஓவர் 19.2 – 155 ஆல் அவுட் – வோக்ஸ் பந்தில் முஜீப் ரஹ்மான் ஷாட் அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

ஓவர் 18.5 – அஷ்வின் அவுட் – சிக்ஸ் அடித்து அதிரடியாய் துவக்கிய அஷ்வின், அடுத்த பந்தில் மீண்டும் பவுண்டரிக்கு முயற்சி செய்து வெளியே வந்தார். ஆனால்,  பந்து மிஸ்ஸாகி கீப்பரிடம் சென்றது. ஸ்டம்பிங்!

ஓவர் 17.5 – ஆண்ட்ரியூ டியே அவுட் – வோக்ஸ் வீசிய பந்தை வெளியே அடிக்க முயற்சி செய்து, கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஓவர் 15 – அக்சர் பட்டேல் அவுட் – கெஜ்ரொலியா பந்தில் எல்.பி.டபிள்யு ஆனார் அக்சர். டிஆர்எஸ் கேட்டதில், நடுவரின் தீர்ப்பு உறுதியானது.

ஓவர் 13.4 – ஸ்டோய்னிஸ் அவுட் – மீண்டும் வாஷிங்க்டன் சுந்தர். அவசரப்பட்டு இறங்கி வந்த ஸ்டோய்னிஸ்ஸை, கீப்பர் டி காக் ஸ்டம்பிங் செய்தார். 

ஓவர் 13 – கருண் நாயர் அவுட் – கெஜ்ரோலயா பந்தில் போல்டானார் நாயர். இது பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய சிக்கல். 

ஓவர் 11.1 – 94/4 – ராகுல் அவுட் – சிறப்பாக விளையாடி வந்த ராகுல், வாஷிங்க்டன் சுந்தர் பந்தில் அடித்த ஷாட் எட்ஜ் வாங்கி உயரே பறக்க, அதை சர்ப்ராஸ் கான் கேட்ச் பிடித்தார்.

ஓவர் 6.0 – 50/3 – 50 ரன்களை தொட்டது பஞ்சாப். அதிரடியாக விளையாடி வரும் ராகுல் 24(14), மற்றும் கருண் நாயருடன் 6(6) சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சி செய்கின்றனர்.

ஓவர் 4.0 – 36/3 – 3 விக்கெட்கள் வீழ்த்தினார் உமேஷ் யாதவ் – ஒரே ஓவரில் மயங்க் அகர்வால், பின்ச் மற்றும் யுவராஜ் சிங்கை வீழ்த்தி, பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய பிரேக்கை கொடுத்துள்ளார் உமேஷ் யாதவ்.

டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி, பீல்டிங் தேர்வு செய்தார்.

 

கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் தோற்ற பெங்களூரு அணி, தங்களது சொந்த மண்ணிற்கு திரும்பியுள்ளது. அஷ்வின் தலைமையில் விளையாடி வரும் பஞ்சாப் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது. தற்போது கடினமான சின்னசுவாமி மைதானத்தில் பெங்களூருடன் பலப்பரீட்சை செய்கிறது.