ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று  நடக்கவிருக்கும்  2வது எலிமினேட்டர் சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் தோல்வியடையும் அணி  இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெரும் அணி சென்னைக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடும்.

ஹைதராபாத் அணி தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்தாண்டு தொடரில் சிறந்த அணியாக இருந்த ஹைதராபாத் அணிக்கு மனதளவில் இந்த தோல்விகள் நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும். இந்த 4 போட்டிகளில் முதல் 3ல் அந்த அணியின் பெரிய பலமான பந்துவீச்சில் ஹைதராபாத் அணி வீரர்கள் சொதப்பினர். கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் சுற்றில் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இந்நிலையில் வாழ்வா? சாவா?  என்ற நிலையில் பேட்டிங், பவுளிங் இரண்டையும் மேம்படுத்திக் கொண்டு இந்த அணி களமிறங்க வேண்டும்.

ஐ.பி.எல்லை பொறுத்தவரை தொடர் வெற்றி என்பது எப்போதும் ஒரு அணிக்கு பெரிய பலமாக இருக்கும். அதே வேளையில் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வருவது மிக கடினமான ஒன்று. அதுவும் நாளை நடக்கவிருப்பது இறுதிச்சுற்றுக்கான பலபரிட்சை என்பதால் கேப்டன் ‘கூல்’ கேன் தனக்கு  முன் உள்ள கடினமான சவாலை எப்படி எதிர் கொள்கிறார் என்பதை பாரக்கவேண்டும்.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை ஹைதராபாத் அணிக்கு நேர்மறையான நிலையில் உள்ளனர். தொடர்ந்து 4 வெற்றிகளை பதிவு செய்த அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கும். முதல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இந்த சுற்றுக்கு அந்த அணி முன்னேறி உள்ளது. மேலும் இந்த அணிகள் இரண்டும் தங்களது கடைசி  லீக் போட்டியில் மோதி கொண்டனர். அதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அந்த வெற்றி தான் அந்த அணியை பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்து வந்தது.

இரு அணியினருக்கும் பெரிய பலம் அந்த அணிகளின் கேப்டன்கள் தான். இந்தாண்டு ஐ.பி.எல்-லில் கேன் 685 ரன்கள் எடுத்துள்ளார். தினேஷ் கார்த்திக் 490 ரன்கள் எடுத்திருக்கிறார். கொல்கத்தா அணியின் சுனில் நரேன் பேட்டிங், பந்துவீச்சு என ஆல்ரவுண்டராக எதிரணிக்கு பெரிய சவாலாக இருப்பார்.

இரு அணிக்கு மற்றொரு பலம் அந்த அணிகளில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். ஆன்ட்ரூ ரசல் கடந்த சில போட்டிகளில் கவனம் ஈர்த்த வீரராக திகழ்கிறார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் ரசல் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அசத்தினார்.

முதல் குவாலிஃபையர் போட்டியில் சென்னைக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் கூட எடுக்க திணறிய ஹைதராபாத் அணியை 139 ரன்கள் எடுக்க வைத்தவர் பிரத்வெயிட்.  அந்த போட்டியில் அவர் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தது சென்னை அணியின் வெற்றியை கடினமாக்கியது.

சிறந்த பவுளர்ஸ்களை கொண்டது ஹைதராபாத் அணி. புவனேஷ்குமார் டெத் ஓவர்களில் கலக்க, ரஷித் கான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களை கூட திணறவைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் இவர்களின் பந்துவீச்சையும் தாண்டி அந்த அணி தோல்வி முகத்தில் உள்ளது.

கொல்கத்தாவின் 3 ஸ்பின்னர்களின் கூட்டணி தான் அந்த அணி தற்போது பிளேஆஃப் சுற்றில் இருப்பதற்க்கு காரணம். சுனில் நரேன், பியூஷ் சாவ்லா, குல்தீப்பை சமாளிப்பது ஹைதராபாத் அணிக்கு பெரிய சவாலாக இருக்கும்.

நாளை போட்டி நடைபெறும் கொல்கத்தா மைதானத்தில் 6 போட்டிகளில் இந்த அணிகள் மோதி உள்ளன. இதில் 1 போட்டியில் மட்டும் தான் ஹைதராபாத் அணி வென்றுள்ளது. எனவே சொந்த மைதானம் என்ற பலம் கொல்கத்தா அணிக்கு இருக்கும். இந்த மைதனாத்தில் 2 முறை பிளேஆஃப் போட்டிகள் நடந்துள்ளது. இரண்டிலும் கொல்கத்தா தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

கொல்கத்தா இன்னிங்ஸ்

ஓவர் 17.4: 180/4 – 3 பவுண்டரிகள் அடித்து மேட்சை முடித்து வைத்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக்.  ஷுப்மான் கில்(57), தினேஷ் கார்த்திக் (45)

ஓவர் 17: 165/4 – 10 ரன்கள் – இலக்கை நெருங்கிவிட்ட கொல்கத்தா வீரர்கள் பொறுமையாக விளையாடி வருகின்றனர்.

24 பந்துகளில் கொல்கத்தாவுக்கு 23 ரன்கள் தேவை

ஓவர் 16: 155/4 – ஜடேஜா ஓவரில் 14 ரன்கள். ஷுப்மான் கில்(55) 32 பந்துகளில் அரைசதம் கண்டார்.

ஓவர் 15: 141/4 – ஆசிப் ஓவரில் 3 சிக்ஸர்கள். சென்னை வெற்றி பெறும் வாய்ப்பு இந்த ஓவரிலேயே கணிசமாக குறைந்துள்ளது.

ஓவர் 14: 120/4 – 11 ரன்கள்

ஓவர் 13: 109/4 – கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கியுள்ளார்.

ஓவர் 12: 101/4 – ரிங்கு சிங் அவுட் – ஹர்பஜன் ஓவரில், ரிங்கு சிங் போல்ட். 100 ரன்களை தொட்டது கொல்கத்தா.

ஓவர் 11: 96/3

ஓவர் 10: 90/3 – ஹர்பஜன் ஓவரில் 10 ரன்கள். சென்னைக்கு உடனடி விக்கெட் தேவை!!

ஓவர் 9: 80/3 – ஜடேஜா சிறப்பாக பந்துவீசினாலும், அவர் வீசிய ஒரு வைடு பந்தை தோனி தவறவிட, அது பவுண்டரிக்கு சென்றது.

ஓவர் 8: 72/3 – ஹர்பஜன் சிங் ஓவரில், ரிங்கு சிங் அவுட்டாகி இருக்க வேண்டும். ஆனால், பேட்டின் கீழ் பட்டு பந்து இறங்கியதால், விக்கெட் கீப்பர் தோனியால் கேட்ச் பிடிக்க முடியவில்லை.

ஓவர் 7: 65/3 – நரேன் அவுட்  ஜடேஜா ஓவரில், சிக்ஸர் அடித்த நரேன், பின் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஓவர் 6: 56/2 – வாட்சன் ஓவரில் கில் 3 சூப்பர் பவுண்டரிகள் அடித்துள்ளார்.

ஓவர் 5: 44/2 – சிறப்பாக பந்துவீசிய ஆசிப், 5 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்துள்ளார்.

ஓவர் 4.2: 40/2 – உத்தப்பா அவுட் 6(8) – மிகவும் டேஞ்சரான உத்தப்பாவை ஆசிப் வீழ்த்தினார்.

ஓவர் 4: 39/1 – வாட்சன் ஓவரில் வெறும் 7 ரன்கள்

ஓவர் 3: 32/1 – நரேன் இரண்டு பவுண்டரி அடிக்க, உத்தப்பா ஒரு ஃபோர் அடித்தார்.

ஓவர் 2: 18/1 – உத்தப்பா களமிறங்கியுள்ளார். ஆசிப் வீசிய ஓவரில், நரேன் ஒரு சிக்ஸர் மட்டும் அடித்தார். இரண்டு முறை ஜடேஜா நரேன் கொடுத்த கேட்சை தவற விட்டார்.

ஓவர் 1: 12/1 – லின் அவுட் 12(6)- முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் லின் விக்கெட்டை கடைசி பந்தில் வீழ்த்தினார் நிகிடி.

கொல்கத்தாவுக்கு 178 ரன்கள் இலக்கு

சென்னை இன்னிங்ஸ்

ஓவர் 20: 177/4 – ஜடேஜா அவுட் 13(12) – பியூஸ் சாவ்லா ஓவரில், ஜடேஜா இரண்டு ஃபோரும், தோனி ஒரு ஃபோரும் அடித்தனர்.  தோனி 43(25).

ஓவர் 19: 162/4 – சுனில் நரேன் அசத்தலாக பந்து வீசி, தோனியை பவுண்டரி அடிக்கவிடாமல் செய்தார்.

ஓவர் 18: 158/4 – தோனி அடித்த பந்தை சிக்ஸ் லைனில் ஷுப்மான் கில் கேட்ச் மிஸ் செய்ய, அது சிக்ஸரானது.

ஓவர் 17: 146/4 – மிச்செல் ஜான்சன் ஓவரில் தோனி இரண்டு சிக்ஸ் அடிக்க, சென்னை 150ஐ நெருங்கியுள்ளது.

ஓவர் 16: 131/4 – ஷிவம் மவியின் ஓவரில் நீண்ட நேரத்திற்கு பிறகு தோனி  மூலமாக சென்னைக்கு ஒரு சிக்ஸ் கிடைத்துள்ளது.

ஓவர் 15: 120/4 – வெறும் 4 ரன் கொடுத்து, சூப்பர் ராயுடுவின் விக்கெட்டையும் எடுத்துவிட்டார் கொல்கத்தாவின் நரேன்.

ஓவர் 14.4: 119/4 – ராயுடு அவுட் 21(17)

ஓவர் 14: 117/3 – 7 ரன்கள் – இன்னும் 6 ஓவர்களே மிச்சமிருக்கும் நிலையில், சென்னை அணியின் மீது தற்போது ப்ரெஷர் அதிகரித்துள்ளது.

ஓவர் 13: 110/3 – 7 ரன்கள் – ராயுடு 13(10), தோனி 2(2)

ஓவர் 12: 103/3 – ரெய்னா அவுட் 31(26) – தொடர் விக்கெட்டுகள்; சென்னைக்கு நேரம் சரியில்லை. ஆனால், இப்போ தல தோனி களமிறங்கியுள்ளார்!

ஓவர் 11:  97/2 – 7 ரன், ஒரு விக்கெட்

ஓவர் 10.2: 91/2 – வாட்சன் அவுட் 36(25)

ஓவர் 10: 90/1 – 9 ரன்கள் – குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வாட்சன் ஒரு சிக்ஸ்.

ஓவர் 9: 81/1 – 5 ரன்கள் – ஷிவம் மவியின் சிறப்பான இந்த ஓவரில், வெறும் 5 ரன்கள் மட்டுமே அடித்தது சென்னை.

ஓவர் 8: 76/1 – 7 ரன்கள்

ஓவர் 7: 69/1 – 11 ரன்கள் – வாட்சன் 22(17), ரெய்னா 19(10) – ரஸ்ஸல் வீசிய இந்த ஓவரில், ரெய்னா மீண்டும் இரண்டு பவுண்டரி அடித்துள்ளார்.

ஓவர் 6: 56/1 – 8 ரன்கள், ஒரு விக்கெட் – களமிறங்கியுள்ள ரெய்னா, இரண்டு ஃபோர் அடித்து அதிரடி துவக்கம் கொடுத்துள்ளார்.

ஓவர் 5.1: 48/1 – டு பிளேஸிஸ் அவுட் 27(15) – சாவ்லாவின் பந்தில் டு பிளேஸிஸ் போல்டானார்.

ஓவர் 5: 48/0 – 19 ரன்கள்  – மிச்சேல் ஜான்சனின் வேகப்பந்து வீச்சை வாட்சனும், டு பிளேஸிஸும் சிதறடித்தனர். இரண்டு சிக்ஸர், ஒரு ஃபோர்.

ஓவர் 4: 29/0 – 5 ரன்கள் – சுனில் நரேன் பந்துவீச்சில் இறங்கியுள்ளார். வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் நரேன்.

ஓவர் 3: 24/0 – 6 ரன்கள் – ஷிவம் மவி, வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.

ஓவர் 2: 18/0 – 8 ரன்கள் – பியூஸ் சாவ்லாவின் இந்த ஓவரில், டு பிளேஸிஸ் இரண்டு பவுண்டரி அடித்தார்.

ஓவர் 1: 10/0 – வாட்சன் மற்றும் டு பிளேஸிஸ் ஆளுக்கு ஒரு பவுண்டரி அடித்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லை. கொல்கத்தா அணியில், நிதிஷ் ராணா காயம் காரணமாக வெளியேறி, அவர் இடத்தில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

 

11-வது ஐ.பி.எல் சீசனின் 33-வது லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி துவங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த சீசனில் மிகுந்த பலம் பொருந்திய அணியாக உள்ளது. இதுவரை தான் சந்தித்த 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சி.எஸ்.கே கேப்டன் தோனி, ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இதனால் தோல்வியின் விளிம்பிற்கு சென்றாலும் முடிவில் வெற்றியை தட்டிப்பறித்து விடுகிறது சி.எஸ்.கே. ஆனால், பந்துவீச்சில் சி.எஸ்.கே அத்தனை வலிமையாக இல்லை. இதனை அணி சிறப்பாக கையாளும் பட்சத்தில் எந்த அணியும் சென்னையை சாய்க்க முடியாது. ஏற்கனவே கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில், சொந்த மண்ணில் சென்னை வீழ்த்தியிருந்தது. இதனால் சென்னை மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் தினேஷ் கார்த்திக், பெரியளவில் சோபிக்கவில்லை. அந்த அணி, 8 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று, நான்காவது இடத்தில் உள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் முன்னேற முயற்சிக்கும் அதே நேரம், சொந்த மண்ணில் சென்னைக்கு பதிலடி கொடுக்க, கொல்கத்தா கடுமையாக போராடும்.

ஐ.பி.எல்-ல் இதுவரை இவ்விரு அணிகளும் 17 முறை மோதியுள்ளன. அதில் சி.எஸ்.கே 11 வெற்றிகளையும், கொல்கத்தா 6 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரேன், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, மிட்செல் ஜான்சன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஷுப்மான் கில், இஷாங்க் ஜக்கி, கம்லேஷ் நாகர்கோட்டி, நிதிஷ் ராணா, வினய் குமார், அபூர்வ் வான்கடே, ரிங்கு சிங், சிவம் மாவி, கேமரூன் டெல்போர்ட், ஜெவோன் சீர்லெஸ், டாம் கர்ரான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ். தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ், ஹர்பஜன் சிங், ட்வயன் பிராவோ, ஷான் வாட்சன், அம்பதி ராயுடு, தீபக் சாகர், கே.எம். ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கிசனி ங்கிடி, துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், க்ஷிதிஸ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்ணோய், இம்ரான் தாஹிர், கார்ன் சர்மா, ஷர்துல் தாகூர், என். ஜெகதீசன், டேவிட் வில்லி. காயம் காரணமாக இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ள தீபக் சாகருக்கு பதிலாக லுங்கிசனி ங்கிடி விளையாடவுள்ளார்.

ஐ.பி.எல் போட்டியின் 18-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்இன்று மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் முதலில் கொல்கத்தா அணியை பேட் செய்ய அழைத்தார். இதுவரை பஞ்சாப் நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி கண்டுள்ளது. கொல்கத்தா ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப் பட்டியலில் முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டின.

கொல்கத்தா அணியின் துவக்க வீரர் கிறிஸ் லின் அதிரடியாக ஆடினார். 41 பந்துகளில் லின், 6 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 74 ரன்கள் விளாசினார். ராபின் உத்தப்பா 34 ரன், கேப்டன் தினேஷ் கார்த்திக் 43 ரன் அடித்து வலு சேர்த்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட் இழந்து 191 ரன் சேர்த்துள்ளது. பஞ்சாப் அணியின் ஆண்ட்ரியூ டியே, பரிந்தர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாபின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோரின் துவக்கமே அதிரடியாக இருந்தது. ராகுல் 46, கெய்ல் 49 ரன்கள் எடுத்திருந்த நேரம் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.

71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி

டெல்லி டேர்டெவில்ஸுக்கு 201 இலக்கு

டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.

நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றன.

ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஐ.பி.எல்-ல் நேற்று இரண்டு போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் போட்டியில் பஞ்சாப் அணியை டெல்லி எதிர்கொண்டது. இதில், பஞ்சாப் எளிதில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டி கொல்கத்தாவில் நடந்தது. கொல்கத்தா அணியை விராட் தலைமையிலான பெங்களூரு அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பேட்டிங் செய்யும்படி பெங்களூரு அணியை அழைத்தார்.

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர். டி காக் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். அவர், மெக்கலமுடன் இணைந்து நிதானமாக ரன் குவித்தார். 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த மெக்கல்லம் நரேன் பந்தில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர், 23 பந்தில் 44 ரன்களை குவித்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவருக்கு 176 ரன்களை மட்டுமே எடுத்தது.

எளிய இலக்குடன் கொல்கத்தா ஆட தொடங்கியது. 2வது ஒவரில் கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 5 ரன்களில் அவுட்டானார். அடுத்து ராபின் உத்தப்பா களமிறங்கினார். சுனில் நரேன் தனது அதிரடியை ஆரம்பித்தார். அவர் 19 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து நிதிஷ் ரானா இறங்கினார். உத்தப்பா 12 ரன்களில் வெலியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். தொடர்ந்து விக்கெட் விழுந்தாலும் கேப்டன் தினேஷ் கார்த்திக் நிதானமாக ஆடினார். கடைசியில் அவர், வினய்குமாருடன் சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.