ராஜஸ்தான் ராயல்ஸ்

Author: Praveen kumar | Posted Date : 04-04-2018 13:43 PM

2008ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டி அறிமுகமான முதல் சீசனிலேயே ராஜஸ்தான் சாம்பியன் பட்டம் பெற்றது. அதன் பிறகு லீக் ஸ்டேஜிலேயே தோல்வி கண்ட ராஜஸ்தான் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இரண்டு ஆண்டுகள் ராஜஸ்தான் அணிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தடை முடிந்து மீண்டும் களம் திரும்பியிருக்கும் அணியில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் இணைந்தார். ஆனால், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவருக்கு ஓராண்டு தடை விதித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா உத்தரவிட்டதால், பிசிசிஐ இந்த சீசனுக்கான ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க ஸ்மித்துக்கு தடை விதித்தது. இதனால் ரஹானேவுக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தவிர, ஐ.பி.எல் ஏலத்தில் மிகவும் விலையுயர்ந்த வீரரான பென் ஸ்டோக்ஸும் இடம் பிடித்திருப்பது கூடுதல் சிறப்பு. ரூ.12.5 கோடி வழங்கி ராஜஸ்தான் அணி, ஸ்டோக்ஸை தக்கவைத்துக் கொண்டது. மேலும் அணியில் மொத்தமாக 23 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ரூ.1,65,00,000 கோடி அணிக்கு ஏலத்தொகையில் மீதமிருக்கிறது.

DateHomeResultsAwayTime