ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Author: Praveen kumar | Posted Date : 04-04-2018 13:55 PM

வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் இருக்கும் தொழில் அதிபர் விஜய் மல்லையா, பெங்களூரு அணியின் உரிமையாளராக உள்ளார். தற்போது அவர் லண்டனில் இருப்பதால், அணியின் பொறுப்புகளை மல்லையாவின் மகன் பார்த்துக் கொள்கிறார். விராட் கோலி அணியின் கேப்டனாக இருக்கிறார். நியூசிலாந்தில் வெட்டோரி டேனியல் அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ளார். இதுவரை மூன்று முறை இறுதிச் சுற்றை எட்டியிருந்தாலும், ஒருமுறை கூட கோப்பையை அணி வென்றது கிடையாது என்பது துரதிஷ்டமே. அதிலும், கடந்த சீசனில் புள்ளி பட்டியலில் பெங்களூரு அணி கடைசி இடத்தை பிடித்தது மேலும் ரசிகர்களுக்கு கவலையை அளித்துள்ளது. அணியில் மொத்தம் 24 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ரூ.15,00,000 லட்சத்தை பெங்களூரு அணி மிச்சம் பிடித்துள்ளது.