கிங்ஸ் லெவன் பஞ்சாப்

Author: Praveen kumar | Posted Date : 04-04-2018 13:38 PM

நடிகை ப்ரீத்தி ஜிந்தா முக்கிய உரிமையாளராக இருக்கும் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஷ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியை தவிர குறுகிய ஓவர் போட்டிகளில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வரும் அஷ்வின், ஐ.பி.எல்-ல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது அனைவரிடத்திலும் மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக அதிரடி பேட்ஸ்மேன் விரேந்தர் சேவாக் உள்ளார். மொத்தம் 21 வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்துள்ள பஞ்சாப் அணியிடம், ரூ.10,00,000 லட்சம் பட்ஜெட் தொகை உள்ளது.