கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Author: Praveen kumar | Posted Date : 04-04-2018 13:40 PM

நடிகர் ஷாருக்கான், நடிகை ஜூஹி சாவ்லா அணியின் முக்கிய உரிமையாளர்கள். கொல்கத்தா அணியின் கேப்டனாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த பல சீசன்களில் இந்த அணிக்கு தலைமை தாங்கி வந்த கவுதம் கம்பிர் டெல்லி அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். இரண்டு ஐ.பி.எல் சாம்பியன் பட்டங்களை கம்பிர் கொல்கத்தா அணிக்காக வென்று கொடுத்தார். ஆனால், இந்த சீசனில் அவரை கொல்கத்தா அணி ஏலத்தில் விடுவித்தது பலரை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதனால் தினேஷ் தலைமையில் கொல்கத்தா அணி எவ்வாறு செயல்பட போவது என்பதை காண ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மற்ற அணிகளை விடவும் மிகுந்த குறைவான வீரர்களை ஏலத்தில் எடுத்த கொல்கத்தா அணியிடம் தற்போது ஏலத்தொகை என ஒன்றுமில்லை. அணிக்கு 19 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த சின்ன அணியை வைத்து கொல்கத்தா அணி எவ்வாறு செயல்பட போகிறது என்றும் எதிர்பார்ப்பில் ஒன்றாக இருக்கிறது.

Leagues
ஐ.பி.எல் 2018
Seasons
2018
Home
DateHomeResultsAwayTime