ஐ.பி.எல்: மிட்செல் ஸ்டார்க்கிற்கு பதில் டாம் குரானை தேர்வு செய்தது கொல்கத்தா

Author: Praveen kumar | Posted Date : 28-03-2018 07:24 AM

tom curran

ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இங்கிலாந்தின் டாம் குரான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

11-வது ஐ.பி.எல் சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இடம் பெற்றிருந்தார். இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார். அப்போது அந்த அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டார்க்கிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் நாடு திரும்பிய அவர், ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். கொல்கத்தா அணிக்காக ரூ.9.4 கோடிக்கு ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், மாற்று வீரராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரும் பேட்ஸ்மேனுமான டாம் குரான் சேர்க்கப்பட்டு இருக்கிறார். 23 வயதான டாம், 2017ம் ஆண்டு ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் தனது சர்வதேச ஆட்டத்தை தொடங்கினார். இதுவரை அவர் விளையாடியுள்ள 6 டி20 போட்டிகளில் 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

ஐ.பி.எல்-ல் இருந்து விலகும் ஆறாவது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஆவார். இதற்கு முன் காயம் காரணமாக நாதன் கோல்டர் நில், ஜேசன் பெஹ்ரேன்டார்ஃப் மற்றும் தடை காரணமாக ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர்.