பஞ்சாப் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் விரேந்தர் சேவாக்?

Author: Praveen kumar | Posted Date : 28-03-2018 07:24 AM

ப்ரல் 7ம் தேதி தொடங்க இருக்கும் 11வது ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் அணியின் முதல் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விரேந்தர் சேவாக் களமிறங்குவதாக அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11வது  ஐ.பி.எல் போட்டிகள் வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்க இருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு இடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறுவதாக கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணி  தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 8ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி அணியுடன் மோதுகிறது. இதில் பஞ்சாப் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான ஆரோன் பின்ச்க்கு ஏப்ரல் 7ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதால், பஞ்சாப் அணியின் சார்பில் விரேந்தர் சேவாக் களமிறங்குவார் என அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் மட்டும் சேவாக் விளையாடுவார் என கூறப்பட்டுள்ளது. ஆனால்  இன்று முட்டாள்கள் தினம் என்பதால் இது பொய்யாக கூட இருக்கலாம் என பேசப்படுகிறது.

ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுவது குறிப்பிடத்தக்கது.