ஐ.பி.எல்-ல் 100 விக்கெட் எடுத்த மூன்றாவது வீரர் சுனில் நரேன்

Author: Nandini L | Posted Date : 17-04-2018 11:12 AM

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் 100 விக்கெட்கள் எடுத்த முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை சுனில் நரேன் படைத்துள்ளார்.

11-வது ஐ.பி.எல் போட்டியில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 71 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. போட்டியில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. சுனில் நரேன் மற்றும் குலதீப் யாதவ் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்களித்தனர்.

மூன்று விக்கெட் எடுத்ததன் மூலம், ஐ.பி.எல் போட்டியில் சுனில் நரேன் 102 விக்கெட்களை பதிவு செய்தார். இதன் மூலம் ஐ.பி.எல்-ல் 100 விக்கெட்கள் எடுத்த முதல் சுழற்பந்து வீச்சாளர் வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது வீரர் என்ற பெருமையை நரேன் பெற்றார்.

இலங்கையின் லசித் மலிங்கா, ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டு வீரர்களாவர். 86 போட்டிகளில் நரேன் 102 விக்கெட்களுடன் 2113 ரன்களும் அடித்துள்ளார்.