பெங்களூரை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

Author: SRK | Posted Date : 15-04-2018 21:56 PM

இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை, ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான், 20 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் விளாசியது. அதிரடியாக  விளையாடிய சஞ்சு சேம்சன், 45 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார். முன்னதாக ரஹானே 36 ரன்கள் அடித்திருந்தார்.

பின்னர் பேட் செய்த பெங்களூருவின் கேப்டன் கோலி(57) அரைசதம் அடித்து நல்ல துவக்கம் தந்தார். 12.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்த போதும், பின்னர்  வந்த நடுநிலை வீரர்கள் சொதப்பியதால், பெங்களூரால் இலக்கை எட்ட முடியவில்லை. 6 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசியாக மந்தீப் சிங்(47) மற்றும் வாஷிங்க்டன் சுந்தர்(35) அதிரடியாக விளையாடியும் எந்த பலனும் இல்லை.