ஐபிஎல்: டெல்லி – ராஜஸ்தான் போட்டி மழையால் தாமதம்

Author: SRK | Posted Date : 12-04-2018 00:47 AM

ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக துவக்க வீரர் ரஹானே 45 ரன்களும், சஞ்சு சேம்சன் 37 ரன்களும் எடுத்துள்ளனர். டெல்லி பந்துவீச்சாளர் நதீம் இரண்டு விக்கெட்கள் எடுக்க, போல்ட் மற்றும் ஷமி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

17.5 ஓவர்கள் ஆன நிலையில், மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்து வருவதால், போட்டியை துவக்க நடுவர்கள் விரும்பவில்லை. 12 மணி வரை போட்டி துவங்கவில்லை என்றால், டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.