ஐ.பி.எல் ஆரவாரம் ஆரம்பம்!

Author: Nandini L | Posted Date : 07-04-2018 18:26 PM

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐ.பி.எல் திருவிழா கோலாகலமாக மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ளது.

2018 சீசனுக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி, மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக துவங்கி இருக்கிறது. தமன்னா உள்ளிட்ட நடிகர்- நடிகைகள் களத்தை அலங்கரிக்க தயாராகி வருகின்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு, இரவு 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

கடந்த ஐ.பி.எல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றதால், இம்முறை கோப்பையை தக்கவைத்துக் கொள்ள துவக்க போட்டியில் இருந்தே ஆதிக்கம் செலுத்த இருக்கிறது. அதே நேரம், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து இரண்டு ஆண்டுகள் தடை பெற்ற சென்னை அணியின் ரிட்டர்ன்ஸ் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. சென்னையின் என்ட்ரிக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.