ஐபிஎல்: டக்வர்த் லூயிஸ் முறைப்படி ராஜஸ்தான் வெற்றி!

Author: SRK | Posted Date : 12-04-2018 01:15 AM

டெல்லி – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், டக்வர்த் லூயிஸ் முறைப்படி, ராஜஸ்தான் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ், 5 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, ரஹானே 45 ரன்கள் விளாசினார். சஞ்சு சேம்சன் 35 ரன்களும், ஜாஸ் பட்லர் 29 ரன்களும் எடுத்தனர்.

17.5 ஓவர்கள் ஆனபோது, மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், ஓவர்கள் குறைக்கப்பட்டது. நள்ளிரவு நெருங்கும்போது, போட்டி மீண்டும் துவங்கியது. அப்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு டக்வர்த் லூயிஸ் முறைப்படி 6 ஓவர்களில் 71 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ரிஷப் பன்ட் 20 ரன்கள் அடிக்க, மேக்ஸ்வெல் மற்றும் கிறிஸ் மாரிஸ் தலா 17 ரன்கள் எடுத்தனர். 6 ஓவர்கள் முடிவில், டெல்லியால் 60 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால், ராஜஸ்தான் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த தோல்வியின் மூலம், டெல்லி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்து, 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.