சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய வீரர்!

Author: SRK | Posted Date : 10-04-2018 09:02 AM


இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்துள்ளார்.

இரண்டு வீரர்களை இழந்துள்ள சிஎஸ்கே அணிக்கு, மாற்று வீரராக சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு வில்லி சம்மதித்துள்ளார். ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னர், மிச்சேல் சாண்ட்னரை இழந்த சிஎஸ்கே, முதல் போட்டியில் காயம் காரணமாக கேதர் ஜாதவை இழந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் லீகில், யார்க்ஷைர் கவுன்டி அணியில் சேர்ந்த வில்லி, சென்னை அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இன்னும் சில நாட்களில் இங்கிலாந்து லீக் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், தற்போது அவர் சென்னையில் சேர்ந்துள்ளார். ஆல் ரவுண்டரான வில்லி, 2016ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் மிக சிறப்பாக விளையாடினார். அதன்பின் காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் பழைய ஃபார்மை அவரால் கொண்டு வர முடியவில்லை. தற்போது மீண்டும் டி20யில் தனது திறமையை காட்ட தயாராகியுள்ளார்.