சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றம்: ஐபிஎல் நிர்வாகம்

Author: SRK | Posted Date : 11-04-2018 21:31 PM

கடும் போராட்டங்களுக்கு இடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இருந்த ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை ஐபிஎல் தலைவர் ராஜீவ் ஷுக்லா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளுக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு அளிக்க மறுத்ததால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். போட்டிகளை புனேக்கு மாற்ற அவர் சிஎஸ்கே நிர்வாகத்திடம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை, பிசிசிஐ எடுக்கும் என்றும் ஷுக்லா தெரிவித்துள்ளார்.