இடம் மாறுகிறதா சென்னை போட்டிகள்? ஐ.பி.எல் அவசர ஆலோசனை

Author: Nandini L | Posted Date : 11-04-2018 17:10 PM

சென்னையில் நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் காவிரி பிரச்னை நீண்டுகொண்டே செல்கிறது. இதனால், சென்னையில் நடந்து வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கைவிடுத்தனர். ஆனால், சென்னையில் திட்டமிட்டபடி போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

நேற்று நடந்த முதல் ஆட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தை முற்றுகையிட முயன்றனர். போட்டியை பார்க்கவந்த ரசிகர்களுக்கும் அடி விழுந்தது. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் நடைபெறும் போட்டியை வேறு மாநிலத்துக்கு மாற்ற ஐ.பி.எல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கேரளா அல்லது தோனியின் சொந்த ஊரான ராஞ்சிக்கு, சென்னை போட்டிகள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.