தகுதி சுற்று 2 கொல்கத்தா Vs ஹைதராபாத்

Author: Praveen kumar | Posted Date : 25-05-2018 20:00 PM
vs

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் won by 14 runs

Recap

ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று  நடக்கவிருக்கும்  2வது எலிமினேட்டர் சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் தோல்வியடையும் அணி  இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெரும் அணி சென்னைக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடும்.

ஹைதராபாத் அணி தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்தாண்டு தொடரில் சிறந்த அணியாக இருந்த ஹைதராபாத் அணிக்கு மனதளவில் இந்த தோல்விகள் நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும். இந்த 4 போட்டிகளில் முதல் 3ல் அந்த அணியின் பெரிய பலமான பந்துவீச்சில் ஹைதராபாத் அணி வீரர்கள் சொதப்பினர். கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் சுற்றில் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இந்நிலையில் வாழ்வா? சாவா?  என்ற நிலையில் பேட்டிங், பவுளிங் இரண்டையும் மேம்படுத்திக் கொண்டு இந்த அணி களமிறங்க வேண்டும்.

ஐ.பி.எல்லை பொறுத்தவரை தொடர் வெற்றி என்பது எப்போதும் ஒரு அணிக்கு பெரிய பலமாக இருக்கும். அதே வேளையில் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வருவது மிக கடினமான ஒன்று. அதுவும் நாளை நடக்கவிருப்பது இறுதிச்சுற்றுக்கான பலபரிட்சை என்பதால் கேப்டன் ‘கூல்’ கேன் தனக்கு  முன் உள்ள கடினமான சவாலை எப்படி எதிர் கொள்கிறார் என்பதை பாரக்கவேண்டும்.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை ஹைதராபாத் அணிக்கு நேர்மறையான நிலையில் உள்ளனர். தொடர்ந்து 4 வெற்றிகளை பதிவு செய்த அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கும். முதல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இந்த சுற்றுக்கு அந்த அணி முன்னேறி உள்ளது. மேலும் இந்த அணிகள் இரண்டும் தங்களது கடைசி  லீக் போட்டியில் மோதி கொண்டனர். அதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அந்த வெற்றி தான் அந்த அணியை பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்து வந்தது.

இரு அணியினருக்கும் பெரிய பலம் அந்த அணிகளின் கேப்டன்கள் தான். இந்தாண்டு ஐ.பி.எல்-லில் கேன் 685 ரன்கள் எடுத்துள்ளார். தினேஷ் கார்த்திக் 490 ரன்கள் எடுத்திருக்கிறார். கொல்கத்தா அணியின் சுனில் நரேன் பேட்டிங், பந்துவீச்சு என ஆல்ரவுண்டராக எதிரணிக்கு பெரிய சவாலாக இருப்பார்.

இரு அணிக்கு மற்றொரு பலம் அந்த அணிகளில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். ஆன்ட்ரூ ரசல் கடந்த சில போட்டிகளில் கவனம் ஈர்த்த வீரராக திகழ்கிறார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் ரசல் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அசத்தினார்.

முதல் குவாலிஃபையர் போட்டியில் சென்னைக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் கூட எடுக்க திணறிய ஹைதராபாத் அணியை 139 ரன்கள் எடுக்க வைத்தவர் பிரத்வெயிட்.  அந்த போட்டியில் அவர் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தது சென்னை அணியின் வெற்றியை கடினமாக்கியது.

சிறந்த பவுளர்ஸ்களை கொண்டது ஹைதராபாத் அணி. புவனேஷ்குமார் டெத் ஓவர்களில் கலக்க, ரஷித் கான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களை கூட திணறவைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் இவர்களின் பந்துவீச்சையும் தாண்டி அந்த அணி தோல்வி முகத்தில் உள்ளது.

கொல்கத்தாவின் 3 ஸ்பின்னர்களின் கூட்டணி தான் அந்த அணி தற்போது பிளேஆஃப் சுற்றில் இருப்பதற்க்கு காரணம். சுனில் நரேன், பியூஷ் சாவ்லா, குல்தீப்பை சமாளிப்பது ஹைதராபாத் அணிக்கு பெரிய சவாலாக இருக்கும்.

நாளை போட்டி நடைபெறும் கொல்கத்தா மைதானத்தில் 6 போட்டிகளில் இந்த அணிகள் மோதி உள்ளன. இதில் 1 போட்டியில் மட்டும் தான் ஹைதராபாத் அணி வென்றுள்ளது. எனவே சொந்த மைதானம் என்ற பலம் கொல்கத்தா அணிக்கு இருக்கும். இந்த மைதனாத்தில் 2 முறை பிளேஆஃப் போட்டிகள் நடந்துள்ளது. இரண்டிலும் கொல்கத்தா தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

Details

DateTimeLeagueSeason
25/05/20188:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversOutcome
ஹைதராபாத்174720Win
கொல்கத்தா160920Loss

ஹைதராபாத்

Batting RB4s6s
வ்ரிதிமான் சாஹாStump கார்த்திக் b சாவ்லா352750
ஷிகர் தவான்lbw குல்தீப் யாதவ்342441
கேன் வில்லியம்சன்c கார்த்திக் b குல்தீப் யாதவ்3300
ஷாகிப் அல் ஹசன்run out குல்தீப் யாதவ்282440
தீபக் ஹூடாc சாவ்லா b நரேன்191901
யூசப் பதான்c சாவ்லா b மவி 3700
கார்லோஸ் ப்ரத்வைட்run out கார்த்திக்8401
ரஷீத் கான்not out341024
புவனேஸ்வர் குமார்not out5210
Extras5
Total     

கொல்கத்தா

Batting RB4s6s
கிறிஸ் லின்lbw ரஷீத் கான்483162
சுனில் நரேன்c ப்ரத்வைட் b கவுல்261341
நிதிஷ் ராணாrun out ரஷீத் கான்221612
ராபின் உத்தப்பாb ரஷீத் கான்2800
தினேஷ் கார்த்திக்b ஷாகிப் அல் ஹசன்8610
ஷுப்மான் கில்b ரஷீத் கான் c ப்ரத்வைட்302021
ஆண்ட்ரே ரஸ்ஸல்c தவான் b ரஷீத் கான்3700
பியூஷ் சாவ்லாb கவுல்121201
சிவம் மாவிb ரஷீத் கான் b ப்ரத்வைட் 6410
குல்தீப் யாதவ்not out0300
ப்ரஸீத் கிருஷ்ணாnot out0000
Extras3
Total