பெங்களூரு vs பஞ்சாப்

Author: Praveen kumar | Posted Date : 13-04-2018 20:00 PM
vs

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு won by 4 runs

Recap

4 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி

பெங்களூரு இன்னிங்ஸ்

ஓவர் 19.3 – 159/6 – பெங்களூரு வெற்றி

கடைசி 6 பந்துகளில் 5 ரன்கள் தேவை. மோஹித் ஷர்மா பவுலிங்

ஓவர் 18.4 – 150/6 – மந்தீப் சிங் அவுட் – ரன் அவுட்டானார் பெங்களூரு அணியின் கடைசி டேஞ்சர் மேன் மந்தீப் சிங். 

ஓவர் 18.1 – 146/5 – டி வில்லியர்ஸ் அவுட் – டியே பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டனர் அதிரடி மன்னன் ஏ.பி டி. 11 பந்துகளில் 10 ரன்கள் தேவை

ஓவர் 17.2 – 141/4 – டி வில்லியர்ஸ் அரைசதம் – ஹேட்ரிக் சிக்ஸர்கள் அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார் டி வில்லியர்ஸ்.

ஓவர் 17 – 134/4 – டி வில்லியர்ஸ் அதிரடி – இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என மொத்தம் இந்த ஓவரில் 19 ரன்கள்

பெங்களூருக்கு 4 ஓவர்களில் 41 ரன்கள் தேவை – டி வில்லியர்ஸ் (34), மந்தீப் சிங்(11) களத்தில்.

ஓவர் 11.3 – 87/4 – சர்பராஸ் கான் டக்கவுட் – அஷ்வினின் அடுத்த பந்திலேயே ஸ்லிப்பில் நின்ற நாயரிடம் கேட்ச் கொடுத்தார் கான்.

ஓவர் 11.2 – 87/3 – டி காக் அவுட் – நல்ல துவக்கம் தந்த டி காக்(45), அஷ்வின் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

ஓவர் 4.5 – 33/2 – கோலி அவுட் – மிகவும் ஆபத்தான கோலியை கூக்லி போட்டு போல்டாக்கினார் முஜீப் ரஹ்மான்.

ஓவர் 0.2 – 0/1 – மெக்குல்லம் அவுட் – அக்சர் பட்டேல் போட்ட இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார் அதிரடி பேட்ஸ்மேன் மெக்குல்லம்.

பெங்களூருக்கு 156 ரன்கள்  இலக்கு!

பஞ்சாப் இன்னிங்ஸ்

ஓவர் 19.2 – 155 ஆல் அவுட் – வோக்ஸ் பந்தில் முஜீப் ரஹ்மான் ஷாட் அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

ஓவர் 18.5 – அஷ்வின் அவுட் – சிக்ஸ் அடித்து அதிரடியாய் துவக்கிய அஷ்வின், அடுத்த பந்தில் மீண்டும் பவுண்டரிக்கு முயற்சி செய்து வெளியே வந்தார். ஆனால்,  பந்து மிஸ்ஸாகி கீப்பரிடம் சென்றது. ஸ்டம்பிங்!

ஓவர் 17.5 – ஆண்ட்ரியூ டியே அவுட் – வோக்ஸ் வீசிய பந்தை வெளியே அடிக்க முயற்சி செய்து, கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஓவர் 15 – அக்சர் பட்டேல் அவுட் – கெஜ்ரொலியா பந்தில் எல்.பி.டபிள்யு ஆனார் அக்சர். டிஆர்எஸ் கேட்டதில், நடுவரின் தீர்ப்பு உறுதியானது.

ஓவர் 13.4 – ஸ்டோய்னிஸ் அவுட் – மீண்டும் வாஷிங்க்டன் சுந்தர். அவசரப்பட்டு இறங்கி வந்த ஸ்டோய்னிஸ்ஸை, கீப்பர் டி காக் ஸ்டம்பிங் செய்தார். 

ஓவர் 13 – கருண் நாயர் அவுட் – கெஜ்ரோலயா பந்தில் போல்டானார் நாயர். இது பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய சிக்கல். 

ஓவர் 11.1 – 94/4 – ராகுல் அவுட் – சிறப்பாக விளையாடி வந்த ராகுல், வாஷிங்க்டன் சுந்தர் பந்தில் அடித்த ஷாட் எட்ஜ் வாங்கி உயரே பறக்க, அதை சர்ப்ராஸ் கான் கேட்ச் பிடித்தார்.

ஓவர் 6.0 – 50/3 – 50 ரன்களை தொட்டது பஞ்சாப். அதிரடியாக விளையாடி வரும் ராகுல் 24(14), மற்றும் கருண் நாயருடன் 6(6) சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சி செய்கின்றனர்.

ஓவர் 4.0 – 36/3 – 3 விக்கெட்கள் வீழ்த்தினார் உமேஷ் யாதவ் – ஒரே ஓவரில் மயங்க் அகர்வால், பின்ச் மற்றும் யுவராஜ் சிங்கை வீழ்த்தி, பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய பிரேக்கை கொடுத்துள்ளார் உமேஷ் யாதவ்.

டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி, பீல்டிங் தேர்வு செய்தார்.

 

கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் தோற்ற பெங்களூரு அணி, தங்களது சொந்த மண்ணிற்கு திரும்பியுள்ளது. அஷ்வின் தலைமையில் விளையாடி வரும் பஞ்சாப் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது. தற்போது கடினமான சின்னசுவாமி மைதானத்தில் பெங்களூருடன் பலப்பரீட்சை செய்கிறது.

Details

DateTimeLeagueSeason
13/04/20188:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversOutcome
பெங்களூரு159619.3Win
பஞ்சாப்1551019.2Loss