ஹைதராபாத் vs மும்பை

Author: Praveen kumar | Posted Date : 12-04-2018 20:00 PM
vs

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் won by 4 runs

Recap

ஏழாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மூன்று முறை ஐ.பி.எல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், இந்த சீசனுக்கான தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. முதுகு காயம் காரணமாகி மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஐ.பி.எல் போட்டியில் இருந்து வெளியேறினார். மேலும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு காலில் காயம் ஏற்பட்டதால், இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் தான். அவருக்கு பதில் சௌரப் திவாரி களமிறக்கப்படலாம். முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற மும்பை முனைப்பு காட்டும்.

அதே சமயம், ஹைதராபாத் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முன்னேற ஆர்வத்துடன் களமிறங்கும். அந்த அணி முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியிருந்தது. ஹைதராபாத்தில் இடம் பெற்றிருக்கும் ஷகிப் அல் ஹசன், இன்னும் நான்கு விக்கெட் எடுத்தால், டி20 போட்டியில் 300 விக்கெட் மைல்கல்லை எட்டிய ஐந்தாவது பந்துவீச்சாளராவார். இடதுகை பந்துவீச்சாளராக 300 விக்கெட் எடுக்கும் முதல் வீரர் என்ற பெருமைக்குரிய பெயரையும் அவர் பெறுவார்.

இரு அணிகளும் இதுவரை மோதிய போட்டிகளில் 5-5 என சமநிலையில் வெற்றிகளை பெற்றுள்ளன. ஆனால், ஹைதராபாதில் நடந்த ஐந்து போட்டிகளில், மும்பை 3ல் வெற்றியை ருசித்துள்ளது.

ஹைலைட்ஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஓவர் 20 – 151/9 – ஹைதராபாத் வெற்றி – கடைசி பந்தில் ஃபோர் அடித்து அசத்தினார் ஸ்டேன்லேக்.

ஓவர் 19.5 – 147/9 – போட்டி டிரா – ஹூடா சிங்கிள் எடுத்து போட்டியை சமன் செய்தார். மறுமுனையில் அதிக பேட்டிங் அனுபவமில்லாத ஸ்டேன்லேக். அவரால் ஒரு ரன் எடுக்க முடியுமா? இல்லை சூப்பர் ஓவரா?

ஓவர் 19.1 – 143/9 – முதல் பந்திலேயே சிக்ஸர் – ஹூடா வந்தார், சிக்ஸர் அடித்தார். 5 பந்துகளில் 5 ரன்கள் தேவை

ஓவர் 19 – 137/9 – சந்தீப் ஷர்மா அவுட் – ஹைதராபாத் வீரர்கள், எதிர்முனையில் இருக்கும் ஹுடாவை ஸ்ட்ரைக்குக்கு கொண்டு வராமல் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து வருகின்றனர்.

ஓவர் 18.4 – 137/8 – கவுல் அவுட் – தனது சூப்பர் பந்துவீச்சில் பேட்ஸ்மேனுக்கு கடும் நெருக்கடி கொடுத்த முஸ்தாபிசுர் ரஹ்மான், கவுல் அடித்த பந்தை தானே கேட்ச் பிடித்தார்.

ஓவர் 17.5 – 136/7- யூசுப் பதான் & ரஷீத் கான் அவுட் – பும்ராவின் ஓவரில் யூசுப் பதான் கேட்ச் கொடுத்து அவுட்டாக, அடுத்த பந்திலேயே ரஷீத் கான் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஓவர் 13 – 107/5 – ஷாகிப் அல் ஹசன் அவுட் – 4வது விக்கெட்டை வீழ்த்தி மும்பை சரித்திரத்தில் தனது பெயரை பதிவு செய்தார் மாஸ் மார்கண்டே.

ஓவர் 10.2 – 89/4 – மனிஷ் பாண்டே அவுட் – மார்கண்டே எக்ஸ்பிரஸ் மீண்டும் தாக்கியது. மனிஷ் பாண்டே பேட்டில் பட்டு பந்து மேலே பறக்க, கேப்டன் ரோஹித் ஷர்மா பிடித்தார்.

ஓவர் 8.5 – 77/3 – தவான் அவுட் – மார்கண்டே மீண்டும் சூப்பர் அசத்தினார். தவானின் விக்கெட்டை வீழ்த்தி மும்பைக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

ஓவர் 8. 0 – 73/2 – வில்லியம்சன் அவுட் –  முஸ்தாபிசுர் ரஹ்மான் பந்தில் அதிரடி மன்னன் கேன் வில்லியம்சன் வீழ்ந்தார்.

ஓவர் 6.5 – 62/1 – சாஹா அவுட் – 20 வயதேயான மயங்க் மார்கண்டே மும்பைக்கு முதல் விக்கெட்டை கொடுத்திருக்கிறார்.

ஓவர் 6 – 56/0 – பவர்பிளே முடிவில், ஹைதராபாத் அணி, விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க வீரர்கள் தவான்(34) மற்றும் சாஹா(21) சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

மும்பை இன்னிங்ஸ்

பரபரப்பான கடைசி நிமிடங்கள்

24 பந்துகளில் 24 ரன்கள். 5 விக்கெட்கள் கையில் உள்ள நிலையில், பதான் மற்றும் ஹூடா களத்தில்.

ஓவர் 17.3 – 133-6 –  கட்டிங் அவுட்  – ரஷீத் கான் பந்தில் கட்டிங் போல்டானார்.

ஓவர் 14.5 – 110/5 – பொல்லார்ட் அவுட் –   ரன்களை அள்ளிக்கொடுத்த ஸ்டான்லேக் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்து, பின் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் பொல்லார்ட்.

ஓவர் 14 – 100 ரன்கள் – பொல்லார்ட் தனது அதிரடியை துவக்க, மும்பை 100 ரன்களை தொட்டுள்ளது.

ஓவர் 8.5 – 72/4 – க்ருனால் பாண்ட்யா அவுட் ஷாகிப் ஓவரை பிரித்து எடுத்து, 12 ரன்கள் குவித்த பாண்ட்யா கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஓவர் 6.0 – 54/3 – இஷான் கிஷான் & ஏவின் லீவிஸ் அவுட் சித்தார்த் கவுல் வீசிய இந்த சூப்பர் ஓவரில், இஷான் கிஷான் பதானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, ஒரு ஃபோர் அடித்த லீவிஸ் கடைசி பந்தில் போல்டானார்.

ஓவர் 2.0 – 11/1- ரோஹித் அவுட். ஸ்டான்லேக் வீசிய இந்த ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஃபோர் அடித்த ஷர்மா, கடைசி பந்தில், ஷாகிப் அல் ஹசன் பிடித்த சூப்பர் கேட்சில் அவுட்டானார்.

Details

DateTimeLeagueSeason
12/04/20188:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversOutcome
ஹைதராபாத்151920Win
மும்பை147820Loss

ஹைதராபாத்