சென்னை vs கொல்கத்தா

Author: Praveen kumar | Posted Date : 10-04-2018 20:00 PM
vs

சென்னை சூப்பர் கிங்ஸ் won by 3 runs

5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை திரில் வெற்றி!

Recap

5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி!

வழக்கம் போல, இந்த ஆட்டத்திலும் சென்னை அணி கடைசி நிமிடம் வரை நம்மை பதபதப்போடு வைத்து வெற்றிபெற்றுள்ளது. என்ன ஆகும்… சென்னை ஜெயிக்குமா என்ற சந்தேகம், பயம், ஜெயிக்க வேண்டும் என்ற பிரார்த்தனை என்று சென்னை ரசிகர்கள் கடைசி பந்து வரை காத்திருந்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், கண்டிப்பாக ஜெயித்துவிடுவோம் என்று எதிர் அணி வீரர்கள், ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள். கடைசி நிமிடம் வரை அவர்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்து, கடைசி பந்தில் காலி செய்துவிடுகின்றனர் சென்னை வீரர்கள்.

போட்டியின் ஹைலைட் ஓவர் பை ஓவர் உங்களுக்காக… 

20வது ஓவர் – 19 ரன்கள்: கொல்கத்தா பவுலர் வினய் குமாரின் நோ பால் உதவியுடன், பிராவோ, ஜடேஜா தலா ஒரு சிக்ஸர் அடித்து சென்னைக்கு இரண்டாவது வெற்றியை தேடித் தந்தனர்.

19வது ஓவர் – பில்லிங்ஸ்(55) அவுட்: 10 ரன்கள்; 3வது பந்தில் சிக்ஸர் அடித்த பில்லிங்ஸ், அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டனார். மிக மிக இக்கட்டான சூழ்நிலையில், வெறும் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார் பில்லிங்ஸ்.

18வது ஓவர் – 15 ரன்கள்: ரஸ்ஸலின் ஓவரில் பில்லிங்ஸ் 2 சூப்பர் சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.

17வது ஓவர் – தோனி(25) அவுட்; 9 ரன்கள்: சாவ்லாவின் கடைசி ஓவரில் தோனி விக்கெட்டை பறிகொடுத்தார். பில்லிங்ஸ் ஒரு ஃபோர் அடித்தார்.

16வது ஓவர் – 7 ரன்கள், “டைம் அவுட்”: மீண்டும் நரேனிடம் இருந்து ஒரு அருமையான ஓவர்; 4 ஓவர்களில் ஒரு விக்கெட் எடுத்து வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.

15வது ஓவர் – 17 ரன்கள்: குரான் வீசிய ஓவரில் சக இங்கிலாந்து வீரரான பில்லிங்ஸ் 2 சிக்ஸர்கள் விளாசினார்.

14வது ஓவர்  – 16 ரன்கள்: தோனிக்கு கோவம் வந்துருச்சு!; குல்தீப் யாதவின் ஓவரில்  முதல் பவுண்டரியையும், சிக்ஸரையும் அடித்தார் தல.

13வது ஓவர் – 9 ரன்கள்; பியூஷ் சாவ்லாவின் ஓவரில், பில்லிங்ஸ் ஒரு பவுண்டரி அடித்தார்.

12வது ஓவர் – ரெய்னா(14) அவுட்: 3 ரன்கள்: நரேன் வீசிய 3வது ஓவரில் ரெய்னா, கேட்ச் கொடுத்து அவுட்டானார். சாம் பில்லிங்ஸ் களமிறங்கியுள்ளார்.

11வது ஓவர் – 10 ரன்கள்: குல்தீப் யாதவின் கடைசி பந்தில் ரெய்னா சிக்ஸர் அடித்து சென்னை 100 ரன்களை தொட உதவினார்.

10வது ஓவர் – 4 ரன்கள்: ரெய்னா ஓடமுடியாமல் காலை பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார். சிகிச்சைக்கு பின், மீண்டும் விளையாடுகிறார்.

9வது ஓவர் – ராயுடு(39) அவுட், 3 ரன்கள்; குல்தீப் யாதவ் வீசிய முதல் ஓவரில், ராயுடு கேட்ச் கொடுத்து அவுட்டனார். இரண்டாவது விக்கெட்டுக்கு தல தோனி களமிறங்கியுள்ளார்.

8வது ஓவர் – 4 ரன்கள்: தனது முதல் ஓவரில், வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன்.

7வது ஓவர் – 4 ரன்கள்: கட்டுக்கோப்பாக பந்து வீசிய ரஸ்ஸல். 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

6வது ஓவர் – வாட்சன்(42) அவுட்: 12 ரன்கள்: குரானின் முதல் ஓவரில், வாட்சன் முதல் இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஃபோர் அடித்தார். ஆனால், 5வது பந்தில் சிக்ஸர் முயற்சி செய்து, ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார்.

5வது ஓவர் – 10 ரன்கள்: ரஸ்ஸலின் இரண்டாவது ஓவரில் ராயுடு ஒரு ஃபோர் அடித்தார்.

4வது ஓவர் – 17 ரன்கள்: சாவ்லாவுக்கு கட்டம் சரியில்லை; இந்தமுறை ராயுடு இரண்டு சிக்ஸர்களும் ஒரு ஃபோரும் அடித்தார்.

3வது ஓவர் – 6 ரன்கள்: ஆண்ட்ரே ரஸ்ஸல் வீசிய இந்த ஓவரில், ராயுடு ஒரு பவுண்டரி அடித்தார்.

2வது ஓவர் – 14 ரன்கள்: சாவ்லா வீசிய இரண்டாவது ஓவரில் வாட்சன் மீண்டும் ஒரு சிக்ஸர் அடிக்க, கொல்கத்தாவின் சொதப்பல் பீல்டிங்கால் ஓவர்த்ரோவில் 5 ரன்கள் கிடைத்தது.

1வது ஓவர் – 16 ரன்கள்: சிங்கம் களம் இறங்கிருச்சு! வினய் குமார் வீசிய முதல் ஓவரில் இரண்டு ஃபோர், ஒரு சிக்ஸர் அடித்தார் வாட்சன்.

சென்னைக்கு 203 இலக்கு நிர்ணயம்…

20வது ஓவர்… 14 ரன்கள்: “எப்படி போட்டாலும் அடிக்குறான்டா”; முதல் பந்திலும் கடைசி பந்திலும் சிக்ஸர்கள் அடித்தார் ரஸ்ஸல். 36 பந்துகளில் 88 ரன்கள். 11 சிக்ஸர்கள். யப்பா…

19வது ஓவர் – 21 ரன்கள்: பிராவோ பந்தை மீண்டும் அடித்து துவைத்தார் ரஸ்ஸல். முதல் 3 பந்துகளில் ஹேட்ரிக் சிக்ஸர்கள்.

தினேஷ் கார்த்திக் அவுட்!

18வது ஓவர் – 10 ரன்கள்: வாட்சன் பந்தில் ரஸ்ஸல் ஒரு சிக்ஸர் அடிக்க, தினேஷ் கார்த்திக் Lbw ஆனார்

17வது ஓவர்… 19 ரன்கள் – பந்தை காணவில்லை: பிராவோவின் பந்தில் ரஸ்ஸல் இரண்டு சிக்ஸர்களும், கார்த்திக் ஒரு சிக்சரும் அடித்தனர். இரண்டாவது பந்தில் ரஸ்ஸல்  அடித்த சிக்ஸர்  மைதானத்தின்  கூரைக்கு  சென்றது.

16வது ஓவர்: 15 ரன்கள்: கட்டுக்கோப்பாக பந்துவீசி வந்த ஷர்துல் தாகூரை, இரண்டு சிக்ஸர்கள் அடித்து தெறிக்க விட்டார் ரஸ்ஸல்.

15வது ஓவர்: 5 ரன்கள்: இம்ரான் தாஹீர் தனது முதல் ஓவரில் 12 ரன்கள் கொடுத்தாலும், பின்னர் சிறப்பாக பந்துவீசி, 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டும் கொடுத்து சிறப்பாக முடித்துள்ளார்.

14வது ஓவர்: 10 ரன்கள்: தனது முதல் ஓவரை பிராவோ வீசினார். சக மேற்கிந்திய தீவுகள் வீரரான ஆண்ட்ரே ரஸ்ஸல் ஒரு சிக்ஸர் அடித்தார்.

13வது ஓவர்: 4 ரன்கள்: சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாஹீர், வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

12வது ஓவர்: 9 ரன்கள்: பந்துவீச்சாளர் வாட்சன்; ஆண்ட்ரே ரஸ்ஸல் ஒரு ஃபோர் அடிக்க, மற்ற  அனைத்து பந்துகளிலும்  தினேஷ் கார்த்திக்குடன் சேர்ந்து சிங்கிள் எடுத்து ரொட்டேட் செய்தார்.

11வது ஓவர்: 6 ரன்கள்: இம்ரான் தாஹீர் வீசிய இந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு ஃபோர் மற்றும் ஒரு 2 ரன்கள் எடுத்தார்.

10வது ஓவர்: 2 ரன்கள்; ரிங்கு சிங் அவுட்: ஷர்துல் தாகூர் வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து, ரிங்கு சிங்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.

9.0வது ஓவர்: 7 ரன்கள்; உத்தப்பா, ராணா அவுட்: வாட்சன் வீசிய 9வது ஓவரின் முதல் பந்தில் ராணா அவுட்டாக, 3வது பந்தில் உத்தப்பாவை சுரேஷ் ரெய்னா ரன்  அவுட் ஆக்கினார்.

8.1வது ஓவர்: ராணா அவுட்: வாட்சன் வீசிய முதல் பந்திலேயே தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார் ராணா. இதைத் தொடர்ந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களம் இறங்கி உள்ளார்.

8.0வது ஓவர்: 7 ரன்கள்: ஷர்துல் தாகூர் வீசிய இந்த ஓவரில், ராணா மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார்.

7வது ஓவர்: 9 ரன்கள்: ஹர்பஜன் சிங் பந்து வீச, நிதிஷ் ராணா ஒரு 4 அடித்தார்.

6.0 – 17 ரன்கள், 1 விக்கெட்: ஜடேஜா வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ஃபோர் அடித்த லின், அடுத்த பந்தில் போல்ட் ஆனார். ஆனால்,கடைசி இரண்டு பந்துகளில் உத்தப்பா இரண்டு சிக்ஸர்கள் விளாசினார்.

5.0 – 12 ரன்கள்: மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அறிமுகம். இம்ரான் தாஹீர் வீசிய இந்த ஓவரில், லின் ஒரு பவுண்டரி அடிக்க, உத்தப்பா ஒரு சிக்ஸர் விளாசினார்.

4.0 – 2 ரன்கள்: 4வது பந்து வீச்சாளராக களமிறங்கியுள்ள ஜடேஜா, வெறும் 2 ரன்கள் மட்டும் கொடுத்தார்.

3.0  –  13  ரன்கள்: ஷேன் வாட்சன் வீசிய இந்த ஓவரில், கிறிஸ் லின்  ஒரு  பவுண்டரியும், உத்தப்பா இரண்டு பவுண்டரியும் அடித்தனர்.

2.0 – அசத்தலாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன், வெறும் 2 ரன்கள் கொடுத்து, சுனில் நரேனின் விக்கெட்டையும் வீழ்த்தினார். எட்ஜ் ஆகி உயர பறந்த பந்தை, சுரேஷ் ரெய்னா பாய்ந்து பிடித்தார்.

முதல் ஓவரிலேயே 18 ரன்கள்: வேகப்பந்து வீச்சாளர் சஹார் வீசிய முதல் ஓவரில் க்றிஸ் லின் ஒரு பவுண்டரி அடிக்க, சுனில் நரேன் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்.

சென்னையில் பரபரப்புகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்றது. முதலில் பந்து வீச்சை தோனி தேர்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், மார்க் வுட், கேதர் ஜாதவுக்கு பதில் சென்னை அணியில் ஷர்துல் தாகூர் மற்றும் சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.

பின்னர் பேசிய கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், டாஸ் என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, முதலில் பேட்டிங் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை. அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜான்சனுக்கு பதில் டாம் குரான் வந்துள்ளார் என்றார்.

 

கிரிக்கெட் போட்டி லைவாக அப்டேட் தமிழில் தெரிந்துகொள்ள நியூஸ்டிஎம்- பக்கத்தை புக் மார்க் செய்யுங்கள்.

போட்டோ கேலரி:

 • DaaXa23VAAAv10v
 • DabuCT5VwAAEBWK
 • 1
 • 2
 • 4
 • 3
 • 5
 • 6
 • 7
 • 8
 • 12
 • 9
 • 11
 • 18
 • 10
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17

Details

DateTimeLeagueSeason
10/04/20188:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversOutcome
சென்னை205519.5Win
கொல்கத்தா202620Loss

சென்னை

Batting RB4s6s
ஷேன் வாட்சன்c Singh; b Curran421933
அம்பதி ராயுடுc Mavi; b K.Yadav392632
சுரேஷ் ரெய்னாc Vinay; b Narine141201
எம்.எஸ். தோனிc Karthik; b Chawla252811
சாம் பில்லிங்ஸ்c Uthappa b Curran562325
ரவீந்திர ஜடேஜாNot Out11701
ட்வயன் பிராவோNot Out11501
Extras7
Total205/5