ராஜஸ்தான் vs சென்னை

Author: Praveen kumar | Posted Date : 11-05-2018 20:00 PM
vs

Recap

11-வது ஐ.பி.எல்-ன் 43-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

தோனி தலைமையிலான சி.எஸ்.கே, 10 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று, 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் பலமாக காணப்படும் சென்னை அணி, பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும், பீல்டிங்கிலும் தனது திறமையை காட்டுவது அவசியமாகும். ஜெய்ப்பூர் மைதானம் சுழற்பந்தை விட வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், சி.எஸ்.கே அணியில் அதற்கேற்ப மாற்றங்கள் நடைபெறும். வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் ஓய்வுக்கு பிறகு இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராஜஸ்தான் அணியை துவம்சம் செய்ததால், சென்னை அணி நம்பிக்கையுடன் களமிறங்கும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்று நடக்கும் போட்டி மிகவும் சவாலானது. 10 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள ராஜஸ்தான், எஞ்சியிருக்கும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்பை தக்கவைக்க முடியும். இதனால் சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை. ராஜஸ்தான், புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையுடனான போட்டியில் பிங்க் நிற ஜெர்சியை அணிய இருக்கிறார்கள்.

இதுவரை இவ்விரு அணிகள் மோதிய 18 ஆட்டங்களில் 12ல் சென்னையும், 6ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ். தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ், ஹர்பஜன் சிங், ட்வயன் பிராவோ, ஷான் வாட்சன், அம்பதி ராயுடு, தீபக் சாகர், கே.எம். ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கிசனி ங்கிடி, துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், க்ஷிதிஸ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்ணோய், இம்ரான் தாஹிர், கார்ன் சர்மா, ஷர்துல் தாகூர், என். ஜெகதீசன், டேவிட் வில்லி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: அஜின்க்யா ரஹானே (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஸ்டுவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ராகுல் த்ரிபாதி, டி ஆர்சி ஷார்ட், கிருஷ்ணப்பா கெளதம், ஜோஃப்ரா அர்ச்சர், தவள் குல்கர்னி, ஜெயதேவ் உனட்கட், அங்கித் சர்மா, அனுரீத் சிங், ஜாகிர் கான், ஷ்ரேயாஸ் கோபால், பிரஷாந்த் சோப்ரா, சுதேசன் மிதுன், பென் லக்ஹ்லின், மஹிபால் லொம்ரோர், அர்யமான் பிர்லா, ஜதின் சக்சேனா, துஷ்மந்தா சமீரா, ஹெய்ன்ரிச் க்ளாஸென்.

Details

DateTimeLeagueSeason
11/05/20188:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversOutcome
ராஜஸ்தான்125415.3No Result
சென்னை176420No Result

ராஜஸ்தான்

 RB4s6s
OMRW

சென்னை

 RB4s6s
OMRW