ஹைதராபாத் vs ராஜஸ்தான்

Author: Praveen kumar | Posted Date : 09-04-2018 20:00 PM
vs

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் won by 2 runs

Recap

11-வது ஐ.பி.எல் போட்டியில் இன்று நடைபெற இருக்கும் 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

 ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு களமிறங்க உள்ளது. ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஐ.பி.எல் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அஜின்க்யா ரஹானே புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

ரஹானே, புவனேஸ்வர் பந்தில் ஆறு முறை அவுட்டாகி உள்ளார். புவனேஸ்வரை தவிர வேறெந்த பந்துவீச்சாளரும் ரஹானேவை மூன்று முறைக்கு மேல் அவுட்டாக்கியது கிடையாது. இதனால் இன்றைய ஆட்டத்தில் புவனேஸ்வர் பந்தை ரஹானே எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்று பார்க்கப்படும்.

கடந்த மூன்று ஆண்டுகளில், ஹைதராபாத் மண்ணில் 150 மேல் ரன் சேஸ் செய்யப்பட்டது கிடையாது. அதிகபட்சமாக 2016ல் டெல்லி அணி 147 ரன்னை சேஸ் செய்திருந்தது.

ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னரும், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்றதால், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இவரது அணியில் இடம் பிடித்துள்ள, யூசப் பதான், ஆடும் லெவன் அணியில் இடம் பெற்றால், ஐ.பி.எல்-ல் அவருக்கு 150 போட்டியாக இன்றைய போட்டி அமையும்.

இதுவரை ஹைதராபாத்- ராஜஸ்தான் அணிகள் மொத்தம் ஏழு முறை மோதியுள்ளன. இதில் நான்கு முறை ராஜஸ்தான் அணியும், மூன்று முறை ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன. போட்டி நடக்கும் ஹைதராபாதில், இரு அணிகளும் ஒரு முறை மோதியிருந்தன. அதில், ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றிருந்தது.

Details

DateTimeLeagueSeason
09/04/20188:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversOutcome
ஹைதராபாத்127115.5Win
ராஜஸ்தான்125920Loss

ஹைதராபாத்

Batting RB4s6s
ஷிகர் தவான்not out7757141
வ்ரிதிமான் சாஹாcatch லக்ஹ்லின்; bowl உனட்கட்5510
கேன் வில்லியம்சன்not out363531
Extras8
Total125/9    

ராஜஸ்தான்

Batting RB4s6s
அஜின்க்யா ரஹானேcatch ரஷீத் கான்; bowl கவுல்131320
டி ஆர்சி ஷார்ட்run out - வில்லியம்சன்4410
சஞ்சு சாம்சன்catch ரஷீத் கான்; bowl ஷாகிப் அல் ஹசன்494250
பென் ஸ்டோக்ஸ்catch வில்லியம்சன்; bowl ஸ்டான்லேக் 5800
ராகுல் த்ரிபாதிcatch பாண்டே; bowl ஷாகிப் அல் ஹசன்171520
ஜோஸ் பட்லர்not out5600
கிருஷ்ணப்பா கெளதம்catch சாகா; bowl கவுல்0200
ஷ்ரேயாஸ் கோபால்catch பதான்; bowl புவனேஷ்வர் 181820
தவள் குல்கர்னிnot out2300
ஜெயதேவ் உனட்கட்run out பதான்0000
பென் லக்ஹ்லின்not out1300
Extras8
Total