பெங்களூரு vs கொல்கத்தா

Author: Praveen kumar | Posted Date : 08-04-2018 20:00 PM
vs

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் won by 4 wickets

டாஸ் வென்றது கொல்கத்தா

Recap

நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றன.

ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஐ.பி.எல்-ல் நேற்று இரண்டு போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் போட்டியில் பஞ்சாப் அணியை டெல்லி எதிர்கொண்டது. இதில், பஞ்சாப் எளிதில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டி கொல்கத்தாவில் நடந்தது. கொல்கத்தா அணியை விராட் தலைமையிலான பெங்களூரு அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பேட்டிங் செய்யும்படி பெங்களூரு அணியை அழைத்தார்.

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர். டி காக் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். அவர், மெக்கலமுடன் இணைந்து நிதானமாக ரன் குவித்தார். 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த மெக்கல்லம் நரேன் பந்தில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர், 23 பந்தில் 44 ரன்களை குவித்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவருக்கு 176 ரன்களை மட்டுமே எடுத்தது.

எளிய இலக்குடன் கொல்கத்தா ஆட தொடங்கியது. 2வது ஒவரில் கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 5 ரன்களில் அவுட்டானார். அடுத்து ராபின் உத்தப்பா களமிறங்கினார். சுனில் நரேன் தனது அதிரடியை ஆரம்பித்தார். அவர் 19 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து நிதிஷ் ரானா இறங்கினார். உத்தப்பா 12 ரன்களில் வெலியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். தொடர்ந்து விக்கெட் விழுந்தாலும் கேப்டன் தினேஷ் கார்த்திக் நிதானமாக ஆடினார். கடைசியில் அவர், வினய்குமாருடன் சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Details

DateTimeLeagueSeason
08/04/20188:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversOutcome
பெங்களூரு176720Loss
கொல்கத்தா177618.5Win

கொல்கத்தா

Batting RB4s6s
சுனில் நரேன்b Umesh501945
கிறிஸ் லின்c de Villiers b Chris Woakes5810
ராபின் உத்தப்பாc Brendon McCullum b Umesh131201
நிதிஷ் ராணாlbw b Washington Sundar342522
தினேஷ் கார்த்திக்not out352940
ரிங்கு சிங்c de Kock b Chris Woakes6610
ஆண்ட்ரே ரஸ்ஸல்c de Villiers b Chris Woakes151121
வினய் குமார்not out6310
பியூஷ் சாவ்லா 0000
குல்தீப் யாதவ் 0000
மிட்செல் ஜான்சன் 0000
Extras13 (b 0, lb 3, w 10, nb 0, p 0)
Total177 (6 wkts, 18.5 Ov)