சென்னை vs மும்பை

Author: Praveen kumar | Posted Date : 28-04-2018 20:00 PM
vs

மும்பை இந்தியன்ஸ் won by 8 wickets

Recap

மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

மும்பை இந்தியன்ஸ், சென்னை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இன்று புனேவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற, மும்பை அணி, முதலில் சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தது. சென்னை வீரர்கள் ரன் குவிக்கத் திணறினர்.

சென்னை அணி 26 ரன்கள் எடுத்த நிலையில் ஷேன் வாட்சன் அவுட் ஆனார். அதன்பிறகு, ராயுடு நிலைத்து நின்று ஆடினார். அவர் 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சென்னை அணி 100 ரன் தாண்டுவதற்குள்ளாகவே இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன்பிறகு, ரெய்னாவுடன் தோனி ஜோடி சேர்ந்து ஆடினார். அதைத் தொடர்ந்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் பிராவோ முட்டை மட்டுமே எடுத்து பேரதிர்ச்சியை கொடுத்தார்.

கடைசி ஓவரில் ரன் குவிப்பார்கள் என்று சென்னை வீரர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், கிடைத்ததோ விக்கெட் மட்டுமே. சாம் பில்லிங்ஸ் 19.4 ஓவரில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். கடைசியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில்  ஐந்து விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுரேஷ் ரெய்னா கடைசி வரை ஆட்டம் இழக்காமல் சென்னை அணி ரன் குவிக்க உதவினார்.

அதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. மும்பை வீரர்களின் விக்கெட்களை வீழ்த்த சென்னை அணியின் எல்லா முயற்சியும் வீணானது. கடைசியில், 19.4 ஓவரில், வெறும் இரண்டு விக்கெட்களை மட்டும் இழந்து மும்பை அணி 173 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த மும்பை ரசிகர்களுக்கு இந்த வெற்றி ஆறுதலை அளித்துள்ளது. தோல்விப் பாதையில் இருந்து மீண்டுவிட்ட நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Details

DateTimeLeagueSeason
28/04/20188:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversOutcome
சென்னை169520Loss
மும்பை173219.4Win

சென்னை

Batting RB4s6s
ஷேன் வாட்சன்c Markande b Krunal Pandya121110
அம்பதி ராயுடுc Cutting b Krunal Pandya463500
சுரேஷ் ரெய்னாnot out754764
எம்.எஸ். தோனிc Lewis b McClenaghan262131
ட்வயன் பிராவோc Markande b McClenaghan0100
சாம் பில்லிங்ஸ்c Cutting b Hardik Pandya3500
ரவீந்திர ஜடேஜாnot out0000
ஷர்துல் தாகூர் 0000
தீபக் சாஹர் 0000
இம்ரான் தாஹிர் 0000
ஹர்பஜன் சிங் 0000
Extras7 (b 0, lb 3, w 4, nb 0, p 0)
Total169 (5 wkts, 20 Ov)    

Did not bat: தீபக் சாஹர்

மும்பை

Batting RB4s6s
சூரியகுமார் யாதவ்c Ravindra Jadeja b Harbhajan443351
ஏவின் லீவிஸ்c SN Thakur b DJ Bravo474332
ரோஹித் சர்மாbatting292112
ஹர்திக் பாண்ட்யாbatting1100
Total