பெங்களூரு vs சென்னை

Author: Praveen kumar | Posted Date : 25-04-2018 20:00 PM
vs

சென்னை சூப்பர் கிங்ஸ் won by 5 wickets

Recap

பெங்களூருவை கிழித்து தொங்கவிட்ட சி.எஸ்.கே!

 

சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைலைட்ஸ்

ஓவர் 19.4 – தோனி சிக்ஸ்  – சென்னை வெற்றி – 207/5

ஓவர் 19.2 – பிராவோ சிக்ஸர் – 4 பந்துகளில் 6 ரன்கள்

ஓவர் 19.1 – பிராவோ பவுண்டரி – லக்கி ஸ்ட்ரைக் –  5 பந்துகளில் 12 ரன்கள்

ஓவர் 19 – 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை…

18.5 – தொடர்ந்து மூன்று வைடு வீசினர் சிராஜ். 7 பந்துகளில் 18 ரன்கள்.

தோனி  சிக்ஸர் : 7 பந்துகளில் 21 ரன்கள்

8 பந்துகளில் 27 ரன்கள் …முடியுமா சிஎஸ்கே?

ஓவர் 18 – 176/5 – ராயுடு அவுட் 82(53) – கோரி ஆண்டர்சன் ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், திடீரென ராயுடு இரண்டு ரன் ஓட முயற்சித்து ரன் அவுட்டானார்.

 

தோனி 29 பந்துகளில் அரைசதம்

ஓவர் 17 – 161/4

ஓவர் 16 – 151/4 – பாவம் ஆர்சிபி. ராயுடு கொடுத்த கேட்சை உமேஷ் யாதவ் தவற விட, அடுத்து 2 சிக்ஸர்கள் அடித்தார் ராயுடு. பந்துவீசிய ஆண்டர்சன் கடுப்பில் திரும்புகிறார்.

ஓவர் 15 – 135/4 – 9 ரன்கள் – மீண்டும் ஒரு சிக்ஸ். சிக்ஸர்கள் மட்டுமே அடித்து வருகிறார் ராயுடு 61(44).

ஓவர் – 14 – 126/4 – ராயுடு அரைசதம் 54(41) – பவன் நெகியின் ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்கள் அடிக்க, ராயுடு ஒரு சிக்ஸ் அடித்து, அரைசதம் கண்டார்.

ஓவர் 13  – 107/4 – சஹால் தொல்லை முடிந்தது. மறுபடியும் பெங்களூருக்கு ஒரு நல்ல ஓவர். 4 ஓவர்களில் சஹால் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை எடுத்துள்ளார்.

ஓவர் 12 – 101/4 – சிக்ஸரோடு சென்னைக்கு 100 ரன்களை கொண்டு வந்தார் தோனி

ஓவர் 11 – 90/4 – சஹால் மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் போட்டு, ரன்களை கட்டுப்படுத்தியுள்ளார். கிடைத்த ப்ரீ ஹிட் வாய்ப்பை, ராயுடு வீணாக்கினார்.

ஓவர் 10 – 83/4 – 9 ரன்கள் – தோனி வந்த இரண்டாவது பந்தே சிக்ஸர். ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறார் நம்ம கேப்டன். அரைசதத்தை நெருங்குகிறார் ராயுடு 44(31).

ஓவர் 9 – 74/4 – ஜடேஜா அவுட் 3(5) – மீண்டும் சஹால் – ஜடேஜாவை போல்டாக்கினார். ‘தல’ தோனி களமிறங்கிவிட்டார்.

ஓவர் 8 – 66/3 – யாதவ் வெறும் 5 ரன்கள் மட்டும் கொடுத்துள்ளார்.

ஓவர் 7 – 61/3 – 6 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் சஹால். இந்த சீசன் ஜடேஜா கடைசியாக இறங்கி சரியாக பேட்டிங் பிடிக்காததால், தோனி அவரை சீக்கிரமே இறக்கி விட்டிருக்கிறார்.

ஓவர் 6.2 – 59/3 – பில்லிங்ஸ் அவுட் – சஹால் வீசிய பந்தில் அவசரப்பட்டு வெளியே வந்த பில்லிங்க்ஸை, டி காக் ஸ்டம்பிங் செய்தார்.

ஓவர் 6 – 55/2

ஓவர் 5.1 – 50/2 – ரெய்னா அவுட் 11(9) – உமேஷ் யாதவ் பந்தில் லெக் சைடில் அடிக்க ரெய்னா முயற்சிக்க, எட்ஜ் ஆகி மந்தீப் சிங் கேட்ச் பிடித்தார்.

ஓவர் 5 – 50/1 – சிராஜ் ஓவரில் ராயுடு மூன்று பவுண்டரி. சென்னை 50 ரன்களை தொட்டது.

ஓவர் 4 – 35/1 – இந்த முறை யாதவ் பந்தில் ரெய்னா ஒரு பவுண்டரி அடிக்க, ராயுடு மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தார்.

ஓவர் 3 – 24/1 – வாஷிங்க்டன் சுந்தர் ஓவரில் இரண்டு சிக்ஸர். ராயுடு அதிரடி!

ஓவர் 2 – 10/1 – உமேஷ் யாதவ் சூப்பராக பந்துவீசி 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

ஓவர் 1 – 8/1 – வாட்சன் அவுட்  7(4) – நெகி வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்து அதிரடியை துவக்க முயற்சித்த வாட்சன் அடுத்த பந்திலேயே அவுட்டானார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 206 ரன்கள் இலக்கு 

 

 

பெங்களூரு ஹைலைட்ஸ்

ஓவர் 20 – 205/8 – 14 ரன்கள் – கடைசியாக வந்த வாஷிங்க்டன் சுந்தர், சிக்ஸ் ஃபோர் அடித்து, பெங்களூரு 200-ஐ கடக்க உதவினார்.

ஓவர் 19.3 – 192/8 – உமேஷ் யாதவ் அவுட்  ஈசல் போல விழுகிறார்கள் பெங்களூரு வீரர்கள். ஒரு வைட் வீசிய பிராவோ அடுத்த பந்திலேயே உமேஷ் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஓவர் 19.2 – 192/7 – பவன் நெகி ரன் அவுட் 

ஓவர் 19.1 – 191/6 – கிராண்ட்ஹோம் ரன் அவுட்

ஓவர் 19 – 191/5 – மந்தீப் சிங் அவுட் 32(17) – இரண்டு சிக்ஸர்கள் அடித்த மந்தீப் தாகூரின் கடைசி பந்தி அவுட்டானார்.

ஓவர் 18  –  173/4 – பிராவோ மீண்டும் ஒரு அசத்தல் ஓவர் வீசி 9 ரன்கள் மட்டும் கொடுத்துள்ளார். மந்தீப் 17(12), கிராண்ட்ஹோம் 10(6)

ஓவர் 17 – 164/4 – 7 ரன்கள் மட்டுமே. தாஹிர் பந்தில் யாரும் ரிஸ்க் எடுக்கவில்லை. அந்த பயம் இருக்கட்டும்!

ஓவர் 16 – 157/4 – மந்தீப் சிங் ஒரு சிக்ஸர் மற்றும் ஃபோர் அடித்து, டி வில்லியர்ஸ் விட்டுச் சென்றதை தொடரப் பார்க்கிறார்.

ஓவர் 15 – 142/4 – கோரி ஆண்டர்ஸன் அவுட் – இம்ரான் தாஹிர் பந்தில் டி வில்லியர்ஸும், அடுத்து வந்த மற்றொரு அதிரடி வீரர் ஆண்டர்சனும் அவுட்டானார்கள். திருப்புமுனை!

ஓவர் 14.5 – 142/3 – டி வில்லியர்ஸ் அவுட் 68(30)

ஓவர் 14 – 138/2 – வாட்டே ஓவர்…இக்கட்டான சூழ்நிலையில், ஒரு ரன் கூட கொடுக்காமல், விக்கெட்டையும் வீழ்த்தினார் பிராவோ.

ஓவர் 13.1 – 138/2 – டி காக் அவுட் – 53(37)

ஓவர் 13 – 138/1 –  என்னடா நடக்குது இங்க….? ஹேட்ரிக் சிக்ஸர்களோடு அரைசதம் அடித்தார் டி வில்லியர்ஸ் 66(26).

ஓவர் 12 – 118/1 – சிக்ஸோடு அரைசதம் அடித்தார் டி காக் 52(35)

(தோனி மைண்ட் வாய்ஸ்) கோலியாவது ஃபோர் தான் அடிச்சிக்கிட்டு இருந்தான். அவசரப்பட்டு அவுட் ஆகிட்டோமோ?

ஓவர் 11 – 106/1 – மரண அடி – டி காக் 43(31), டி வில்லியர்ஸ் 45(20) –  தாஹிர் ஓவரில் இரண்டு சிக்ஸர் ஒரு ஃபோர் அடித்தார் டி வில்லியர்ஸ். இரண்டு பேட்ஸ்மேன்களும் அரைசதத்தை நெருங்கியுள்ளனர்.

ஓவர் 10 – 87/1 – டி காக் 41(30), டி வில்லியர்ஸ் 28(15) – பிராவோவின் முதல் ஓவரில் 10 ரன்கள் கொடுத்துள்ளார்.

ஓவர் 9 – 77/1 – இந்த சீசன் விட்டு விட்டு பாமில் வரும் இம்ரான் தாஹிர், அருமையாக பந்து வீசி வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சென்னை பீல்டிங் இன்னிக்கு செம!

ஓவர் 8 – 72/1 – வாட்சன் தனது முதல் ஓவரை வீசினார். 9 ரன்கள்

ஓவர் 7 – 63/1 – டி காக் 22(16), டி வில்லியர்ஸ் 23(11) – ஜடேஜா வீசிய இந்த ஓவரில் மீண்டும் டி வில்லியர்ஸ் சிக்ஸ் அடிக்க, 11 ரன்கள் எடுத்து பெங்களூரு.

ஓவர் 6 – 52/1 – ஹர்பஜன் ஓவரில் டி வில்லியர்ஸ் சிக்ஸ், சிக்ஸ், ஃபோர் என கலங்கடித்து விட்டார். நல்ல வேளை பவர் பிளே முடிந்தது!

ஓவர் 5 – 35/1 – கோலி அவுட் – 18(15) – எந்த ரன்னும் கொடுக்காமல், கோலியின் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் சூப்பர் சஹார்.

ஓவர் 4 – 35/0 – 7 ரன்கள் – ஹர்பஜன் வீசிய இந்த ஓவரில் டி காக் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார்.

ஓவர் 3 – 28/0 – 15 ரன்கள் – அதிரடியை தொடரும் கோலி, மீண்டும் ஒரு பவுண்டரி அடிக்க, டி காக் சிக்ஸ் அடித்து சஹாருக்கு மேலும் நெருக்கடி கொடுத்தார்.

ஓவர் 2 – 13/0 – தாகூர் ஓவரில் மேலும் ஒரு ஃபோர். கோலி தனது சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார்

ஓவர் 1 – 5/0 – சஹார் வீசிய முதல் ஓவரில் கோலி  ஒரு ஃபோர் அடித்தார்.

டாஸ் வென்ற சிஎஸ்கே பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், 6வது இடத்தில் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது.

Details

DateTimeLeagueSeason
25/04/20188:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversOutcome
பெங்களூரு205820Loss
சென்னை207519.4Win

பெங்களூரு

Batting RB4s6s
குயின்டன் டி காக்c & b DJ Bravo533714
விராட் கோலிc Ravindra Jadeja b SN Thakur181530
ஏபி டி வில்லியர்ஸ்c Billings b Tahir683028
கோரே ஆண்டர்சன்c Harbhajan b Tahir2800
மந்தீப் சிங்c Ravindra Jadeja b SN Thakur321713
கொலின் டி கிராண்ட்ஹோம்run out (Dhoni)11710
பவன் நெகிrun out (Ravindra Jadeja/Dhoni)0100
வாஷிங்டன் சுந்தர்not out13411
உமேஷ் யாதவ்c Billings b DJ Bravo0100
முகமது சிராஜ்not out0000
யூசுவேந்திர சாஹல் 0000
ExtrasExtras 8 (b 4, lb 0, w 4, nb 0, p 0)
Total205/8