ஹைதராபாத் vs சென்னை

Author: Praveen kumar | Posted Date : 22-04-2018 16:00 PM
vs

சென்னை சூப்பர் கிங்ஸ் won by 7 wickets

Recap

ஹைலைட்ஸ்

4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி 

ஹைதராபாத் இன்னிங்ஸ்

ஓவர் 20 – 178/6 – 14 ரன்கள் – அசத்தலாக பேட் செய்த ரஷீத் கான், 3 பந்துகளில் 16 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், ஒரு சிக்ஸர், ஒரு ஃபோர் அடித்து, கடைசி பந்துவரை போட்டியை கொண்டு சென்றார். ஆனால், பிராவோவின் கடைசி பந்தை அவரால் சிக்ஸ் அடிக்க முடியவில்லை.

ஓவர் 19 – 164/6 – யூசுப் பதான் அவுட்

ஓவர் 18 – 150/5 – வில்லியம்சன் அவுட் – பிராவோ பந்தில் வில்லியம்சன் சிக்ஸர் முயற்சி செய்ய, ஜடேஜா சூப்பர் கேட்ச் பிடித்து ‘டேஞ்சர்’ வில்லியம்சன்னை வெளியேற்றினார்.

ஓவர் 17 – 141/4

ஓவர் 16 – 131/4  –  பிராவோவின் முதல் ஓவரில் யூசுப் பதான் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்.

ஓவர் 15 – 117/4 – மூன்று சிக்ஸர்கள் அடித்து கரண் ஷர்மா ஓவரை பந்தாடினார் வில்லியம்சன்

ஓவர் 14 – 95/4

ஓவர் 13 – 84/4 – 35 பந்துகளில் அரைசதம் அடித்தார் ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன்.

ஓவர் 12 – 78/4

ஓவர் 11 – ஷாகிப் அல் ஹசன் அவுட் – கரண் ஷர்மா வீசிய முதல் ஓவரிலேயே, ஷாகிப் அல் ஹாசனை விக்கெட்டை வீழ்த்தினார்.

ஓவர் 10 – 71/3

ஓவர் 9 – 60/3

ஓவர் 8 – 51/3

ஓவர் 7 – 43/3

ஓவர் 6 – 40/3 – ஷாகிப் அல் ஹசன் இரண்டு ஃபோர் அடிக்க, பவர் பிளே முடிவில், ஹைதராபாத் 40 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 5 – ஹூடா அவுட் – 6 ரன், 1 விக்கெட் – யாருய்யா இந்த சஹார்? வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்த நிலையில் 3வது விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனால்,  வில்லியம்சன் ஒரு சிக்ஸ் அடித்தார்.

ஓவர் 4 – வில்லியம்சன் மீண்டும் இரண்டு பவுண்டரி அடித்து ரன் ரேட்டை கட்டுக்குள் கொண்டு வருகிறார்.

ஓவர் 3 – 11/2 – மனிஷ் பாண்டே அவுட் – 1 ரன், 1 விக்கெட் – மீண்டும் தாக்கினர் சஹார்.  பவுண்டரிக்கு முயற்சித்த பாண்டே, கரண் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்தார்.

ஓவர் 2 – 10/1

ஓவர் 1 – 0/1 – புய் அவுட் – இளம் வீரர் புய், சஹார் பந்துவீச்சில் திணறி, 5வது பந்தில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ரன் எதுவும் கொடுக்காமல் விக்கெட் எடுத்துள்ளார் சஹார்.

 

ஹைதராபாத்துக்கு 183 இலக்கு

சென்னை இன்னிங்ஸ்

ஓவர் 20 – 182/3

ஓவர் 19 – 171/3 – ரெய்னா அரைசதம் – தோனி இரண்டு பவுண்டரிகள் அடிக்க, ரெய்னா ஒரு பவுண்டரி அடித்து, இந்த ஐபிஎல்-லில் தனது முதல் அரைசதத்தை விளாசினார்.

ஓவர் 18 –  157/3

ஓவர் 17 – 146/3 – ராயுடு அவுட் – அடக்கடவுளே!! அற்புதமாக விளையாடி வந்த ராயுடு தேவையில்லாமல் ரன் ஓட முயற்சித்து ரெய்னாவுடன் ஏற்பட்ட குழப்பத்தால் ரன் அவுட்டானார்.

ஓவர் 16 – 137/2 – எல்லோருக்கும் விழுகிறது அடி. ராயுடு மேலும் ஒரு சிக்ஸ் ஃபோர் அடிக்க, ரெய்னாவும் ஒரு ஃபோர் அடித்தார்.

ஓவர் 15 – 120/2 – ராயுடு அரைசதம் – அதிரடியை தொடரும் ராயுடு, மேலும் ஒரு சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்தார். 27 பந்துகளில் அரைசதம் அடித்து, இக்கட்டான சூழ்நிலையில் இருந்து சென்னையை மீட்டுள்ளார்.. ஹேட்ஸ் ஆப்!!

ஓவர் 14 – 106/2 – 3 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசினார் அம்பதி ராயுடு. 100 ரன்களை தொட்டது சிஎஸ்கே. ராயுடு(49), ரெய்னா (33)

ஓவர் 13 – 87/2

ஓவர் 12 – 78/2 – 16 ரன்கள் –  அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா, தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

ஓவர் 11 – 62/2

ஓவர் 10 – 54/2 – 13 ரன்கள் – 50  ரன்களை தொட்டது சிஎஸ்கே. முதல் 10 ஓவர்களில் ஒரு அணி அடிக்கும் மிகக்குறைந்த ஸ்கோரும் இதுவாகும்.

ஓவர் 9 – 41/2

ஓவர் 8 – 37/2 – டு பிளேஸிஸ் அவுட் – 5 ரன்கள் 1 விக்கெட்

ஓவர் 7 – 32/1

ஓவர் 6 – 27/1 – பவர் பிளே முடிவில் சென்னை 27 ரன்கள் எடுத்துள்ளது. 2018 ஐபிஎல் போட்டிகளில், பவர் பிளேவில் ஒரு அணி அணிக்கும் மிக குறைந்ததை ஸ்கோர் இதுவாகும்.

ஓவர் 5 – 21/1

ஓவர் 4 – 15/1 – வாட்சன் அவுட் – 7 ரன்கள் 1 விக்கெட் – புவனேஷ்வர் குமார் பந்தில் சிக்ஸர் அடித்த வாட்சன், அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்துட்டு அவுட்டானார்.

ஓவர் 3 – 8/0

ஓவர் 2 – 4/0

ஓவர் 1 – 2/0 – புவனேஸ்வர் குமார் வீசிய ஓவரில் 2 ரன்கள் மட்டுமே அடித்தது சென்னை

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இம்ரான் தாஹிருக்கு பதில் ஃபாப் டுபிளேஸிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் அணியில், காயமடைந்த தவானுக்கு பதில் இளம் இந்திய வீரர் ரிக்கி புய் சேர்க்கப்பட்டுள்ளார்.

டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது

Details

DateTimeLeagueSeason
22/04/20184:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversOutcome
ஹைதராபாத்173619.4Loss
சென்னை182320Win