பஞ்சாப் vs டெல்லி

Author: Praveen kumar | Posted Date : 08-04-2018 16:00 PM
vs

கிங்ஸ் லெவன் பஞ்சாப் won by 1 runs

Recap

டெல்லியில் எளிதில் வீழ்த்திய பஞ்சாப்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்றது. முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. டெல்லி அணியின் கொலின் முன்றோ, கவுதம் காம்பீர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முன்றோ 4 ரன்னில் ஆட்டமிழக்க, கவுதம் காம்பீர் தாக்குப்பிடித்து நின்றார். ஆனால், அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் (11), விஜய் சங்கர் (13), ரிஷப் (28) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அரைசதம் அடித்த காம்பீர் 42 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில், டெல்லி அணி, ஏழு விக்கெட்களை இழந்து 166 ரன் எடுத்தது.

எளிய இலக்குடன் பஞ்சாப் அணி களம் கண்டது. தொடக்க வீரராக களம் இறங்கிய கேஎல் ராகுல் 16 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்தார். இதனால், பஞ்சாப் அணியின் தொடக்கமே அமர்க்களமாக இருந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் 18.5 ஓவரில் 167 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதலாவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி டேர்டெவில்ஸை சந்திக்கிறது.

 

சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடி வந்த அஷ்வின் இப்போது பஞ்சாப் அணியின் கேப்டன். அதேபோல், கொல்கத்தா அணிக்காக விளையாடி கோப்பையை வென்று கொடுத்த கவுதம் கம்பீர் இப்போது டெல்லி அணிக்கு கேப்டனாக இருக்கிறார்.

கேப்டனாக அஷ்வின் விளையாடும் முதல் ஐ.பி.எல் ஆட்டம் இது. யுவராஜ் சிங், கிறிஸ் கெயில், டேவிட் முல்லர், கே.எல்.ராகுல் என முன்னணி வீரர்கள் இருப்பது அஷ்வினுக்கு பக்கபலம்.

கவுதம் கம்பீரின் திறமையான கேப்டன்ஷிப் டெல்லி டேர்டெவில்ஸை கரை சேர்க்கும் என்று அந்த அணி உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

வீரர்கள் விவரம் வருமாறு:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி: ரவிச்சந்திரன் அஷ்வின் (கேப்டன்), அக்சர் படேல், யுவ்ராஜ் சிங், கருண் நாயர், லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், டேவிட் மில்லர், ஆரோன் பின்ச், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மயங்க் அகர்வால், அங்கித் ராஜ்பூத், மனோஜ் திவாரி, மோஹித் சர்மா, முஜீப் உர் ரஹ்மான், பரிந்தர் ஸ்ரன், ஆண்ட்ரியூ டியே, அக்ஷ்தீப் நாத், பென் ட்வர்ஷுய்ஸ், பர்தீப் சாஹு, மயங்க் தகர், மன்சூர் தர். 

டெல்லி டேர்டெவில்ஸ் அணி: கவுதம் கம்பிர் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கிறிஸ் மோரிஸ், ரிஷாப் பந்த், க்ளென் மேக்ஸ்வெல், ஜேசன் ராய், கொலின் முன்றோ, முகமது ஷமி, காகிஸோ ரபாடா, அமித் மிஸ்ரா, ப்ரித்வி ஷா, ராகுல் தேவாதியா, விஜய் ஷங்கர், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், ஷாபாஸ் நதீம், டேனியல் கிறிஸ்டின், ஜெயந்த் யாதவ், குர்கீரத் சிங் மான், ட்ரெண்ட் பௌல்ட, மஞ்சோத் கல்ரா, அபிஷேக் சர்மா, சந்தீப் லாமிச்சனே, நமன் ஒஜ்ஹா, ஸயன் கோஷ். 

 

Details

DateTimeLeagueSeason
08/04/20184:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversOutcome
பஞ்சாப்167418.5Win
டெல்லி166720Loss