பஞ்சாப் vs சென்னை

Author: sriram | Posted Date : 15-04-2018 20:00 PM
vs

கிங்ஸ் லெவன் பஞ்சாப் won by 4 runs

Recap

4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

மொகாலியில் இன்று இரவு நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

தொடர்ந்து இரு வெற்றிகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய போட்டியில், தனது கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ள பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் கடைசி வரை போராடி தான் வெற்றியை பெற்றது. சென்னை அணியை பொறுத்தவரை கடைசியில் அணிக்கு வலுக்கொடுக்க பிரவோவுடன் சாம்பில்லிங்ஸ் இணைந்து இருப்பது பலமாக அமையும்.

மேலும் ஐபிஎல் என்றாலே அதிரடி காட்டும் தோனி இந்தாண்டு ஏனோ ரன்கள் எடுக்க மிகவும் சிரமப்படுகிறார். தோனி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிகளில் எப்போதும் கலக்குவார் என்பதால் கண்கள் அனைத்தும் இன்று தோனி மீது தான். பழைய அதிரடிக்கார கேப்டனை பார்க்க சென்னை அணி ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

சென்னை அணியில் காயம் காரணமாக விலகி இருந்த முரளி விஜய் இன்று களமிறங்குகிறார். மேலும் கேதர் ஜாதவ் மற்றும் ரெய்னா இல்லாததால் இன்றைய போட்டியில்  சில மாற்றங்கள் செய்யப்படும்.

பஞ்சாப் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. பின்னர் இரண்டாவது போட்டியில் ஆர்சிபி அணியின் அதிரடியில் தோல்வியடைந்தது.

இன்றைய போட்டி அந்த அணியின் சொந்த மண்ணில் நடைபெறுவதால் அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது.

பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், சென்னையின் பந்துவீச்சை பதம் பார்க்க வாய்ப்புகள் உள்ளன. அவர் முதல் இரண்டு போட்டியிலும் சிறப்பாக விளையாடி இருந்தார். இந்த ஆட்டத்தின் முக்கியமான விஷயமே சென்னைக்கும் ஆர்.அஸ்வினுக்கும் இடையே நடக்கவிருக்கும் போட்டி தான்.

சென்னை அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடிய அஸ்வின் தற்போது அந்த அணியை எதிர்த்து முதல் முறையாக களமிறங்குகிறார். இது எந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இடம் பிடித்தவர் சுரெஷ் ரெய்னா. 134 போட்டிகளில் விளையாடிய ரெய்னா இல்லாமல் சென்னை அணி முதன்முறையாக களமிறங்க உள்ளது.

இதுவரை இரு அணிகளும் 17 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை அணி 10 போட்டிகளிலும் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் வென்றுள்ளது. சென்னை அணியின் தொடர் வெற்றியை நிறுத்துமா அஸ்வின் தலைமையிலான அணி?

ஹைலைட்ஸ்

சென்னை இன்னிங்ஸ்

ஓவர் 20.0 – 193/5 – 12 ரன்கள் – மோஹித் சர்மாவின் அற்புதமான கடைசி ஓவரில், ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர்  மட்டுமே அடிக்க முடிந்தது. முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த தோனிக்கு எட்டாத படி, யார்க்கர் பந்துகளை வீசினார் சர்மா. இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப்.

ஓவர் 19.0 – 181/4 – 19 ரன்கள் ஜடேஜா அவுட் – டியேவை பந்தாடினர்  தோனி. இரண்டு சிக்ஸ் ஒரு ஃபோர்.

ஓவர் 18.0 – 162/4 – 19 ரன்கள் – தோனி அரைசதம் – மோஹித் சர்மாவின் ஓவரில், ஜடேஜா ஒரு சிக்ஸ், தோனி ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தார்.

18 பந்துகளில் 55 ரன்கள் தேவை 

ஓவர் 17.0 – 143/4 – 12 ரன்கள் – தோனி, ஜடேஜா ஒரு ஃபோர் அடித்தனர்.

ஓவர் 16.0 – 131/4 – 9 ரன்கள்

ஓவர் 15.0 – 122/4 – 9 ரன்கள் – தோனி ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால்,  சென்னை அணி, ஓவருக்கு 16 ரன்களுக்கும் மேல் எடுக்க வேண்டிய நிலை.

ஓவர் 14.0 – 114/4 – 6 ரன்கள் 1  விக்கெட்.

ஓவர் 13.4 – 114/4 – ராயுடு அவுட் – ஓவரை சிக்ஸர் அடித்து துவக்கிய ராயுடு, 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட்டானார்.

ஓவர் 13.0 – 107/3 – 6 ரன்கள்

ஓவர் 12.0 – 101/3 – 7 ரன்கள்

ஓவர் 11.0 – 94/3 – 9 ரன்கள் – டியே பந்தில் ராயுடு ஒரு ஃபோர் அடித்தார்.

ஓவர் 10.0 – 85/3 – 4 ரன்கள் – முஜீப் ரஹ்மான், சூப்பராக ஒரு ஓவரை வீசி சென்னையை கட்டுப்படுத்தியுள்ளார்.

ஓவர் 9.0 – 81/3 – 13 ரன்கள் – அஷ்வினின் இந்த ஓவரில், தோனியும் ராயுடுவும் ஆளுக்கொரு பவுண்டரி அடித்தனர்.

ஓவர் 8.0 – 68/3 – 10 ரன்கள் – துவக்கத்திலேயே தோனி அதிரடியாக ஃபோர் அடித்துள்ளார்.

ஓவர் 7.0 – 58/3 – 5 ரன்கள், 1 விக்கெட்

ஓவர் 6.4 – 56/3 – பில்லிங்ஸ் அவுட் – அஷ்வின் வீசிய பந்து, பில்லிங்ஸ் பேடில் பட்டு பவுண்டரி சென்றது. அஷ்வின் அப்பீல் செய்து அம்பயர் கொடுக்காததால், ரிவியூ செய்தார். ரிவ்யூவில் பில்லிங்ஸ் எல்.பி.டபிள்யூ ஆனது உறுதி செய்யப்பட்டது.

ஓவர் 6.0 – 53/2 – 7 ரன்கள் – சாம் பில்லிங்ஸ் ஒரு பவுண்டரி அடித்தார். கடந்த போட்டியில், பில்லிங்ஸ் காட்டிய அதிரடியை இந்த முறை திருப்பி கொண்டுவர முடியுமா?

ஓவர் 5.0 – 46/2 – 7 ரன்கள், ஒரு விக்கெட்

ஓவர் 4.1 – 39/2 – விஜய் அவுட்

ஓவர் 4.0 – 39/1 – 8 ரன்கள்

ஓவர் 3.0 – 31/1 -14 ரன்கள் – ராயுடு சிக்ஸர் அடிக்க, முரளி விஜய் ஃபோர் அடித்தார்.

ஓவர் 2.0 – 17/1 – 8 ரன்கள் – வாட்சன் அவுட் – இரண்டு பவுண்டரி அடித்து விறுவிறுப்பை கிளப்பிய வாட்சன், மோஹித் ஷர்மாவின் கடைசி பந்தில், கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

ஓவர் 1.0 – 9/0 – 9 ரன்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 198 இலக்கு 

பஞ்சாப் இன்னிங்ஸ்

ஓவர் 20.0 – பஞ்சாப் 197/7  – கடைசி ஓவரை சிறப்பாக வீசிய பிராவோ, கருண் நாயர் விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமல்லாமல், வெறும் 4 ரன்கள் கொடுத்து முடித்தார். 20 ஓவரில் பஞ்சாப் 197/7. 

ஓவர் 19.0 – 193/6 – அஷ்வின் அவுட் – 13 ரன்கள் கொடுத்த தாகூர், அஷ்வின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஓவர் 18.0 – 180/5 – 15 ரன்கள் – பிராவோ ஓவரில், கருண் நாயர் அசத்தலாக ஒரு சிக்ஸர் மற்றும் ஃபோர் அடித்து, பிரஷரை குறைத்தார்.

ஓவர் 17.0 – 165/5 – மீண்டும் ஒரு அசத்தல் ஓவர் போட்டு, 5 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார் தாஹிர்.

ஓவர் 16.0 – 160/5 – யுவராஜ் அவுட் – யுவராஜ் விக்கெட்டை வீழ்த்திய தாகூர், 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 

ஓவர் 15.0 – 154/4 – 5 ரன்கள், 2 விக்கெட் – ஆட்டத்தின் திருப்பு முனையான இந்த ஓவரில், ஆபத்தான மயங்க் அகர்வால் மற்றும் பின்ச் வெளியேறினார்கள்.

ஓவர் 14.2 – 149/4 – பின்ச் கோல்டன் டக் – அடுத்த பந்திலேயே பின்ச் எல்.பி.டபுள்யூ ஆனார்.

ஓவர் 14.1  – 149/3 – மயங்க் அகர்வால் அவுட் – இம்ரான் தாஹிரின் 3வது ஓவரின் முதல் பந்திலேயே மயங்க் அகர்வால் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

ஓவர் 14.0 – 149/2 – 13 ரன்கள்

ஓவர் 13.0 – 136/2 – 7 ரன்கள் – தாஹிரின் ஓவரில் யுவராஜ் சிங் ஒரே ஒரு சிக்ஸர் மட்டும் அடித்து மற்ற பந்துகளில் கட்டை வைத்தார்.

ஓவர் 12.0 – 129/2- 9 ரன்கள்

ஓவர் 11.3 – 127/2 – கெயில் அவுட் – ஷேன் வாட்சன் கெயிலின் லெக் சைடில் வைடாக பந்தை வீச, அதை பின்னல் நின்று கொண்டிருந்த தாஹிரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் கெயில்.

ஓவர் 11.0 – 120/1 – 5 ரன்கள் – பிராவோ தனது முதல் ஓவரில் வெறும் 5 சிங்கிள்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.

ஓவர் 10.0 – 115/1 – ஹர்பஜன் சிங்கின் ஓவரில், மயங்க் அகர்வால், ஒரு சிக்ஸ் மற்றும்  ஃபோர் அடித்துள்ளார்.

ஓவர் 9.0 – 102/1 – வாட்சன் தனது முதல் ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.

ஓவர் 8.0 – 96/1 – ராகுல் அவுட் – 5 பந்துகளை சிறப்பாக வீசி, பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்திய ஹர்பஜன், கடைசி பந்தில் ராகுலை வீழ்த்தினார். பவுண்டரிக்கு குறிவைத்த ராகுல், பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதுக்கு மேல அடி வாங்க வாங்கணும்னா கொஞ்சம் ரெஸ்ட் வேணும். டைம் அவுட் கேட்டது சென்னை. 

ஓவர் 7.0 – 92/0 – 17 ரன்கள் – கெயில் அரைசதம் தாஹிரின் ஓவரையும் கிழித்துவிட்டார் கெயில்.

ஓவர் 6.0 – 75/0 – 22 ரன்கள் – நல்ல வேலை பவர் பிளே முடிந்தது. சஹார் வீசிய 3வது ஓவரை 2 சிக்ஸர் 2 ஃபோர் என கெயில் கிழித்துவிட்டார்.

ஓவர் 5.0 – 53/0 – 16 ரன்கள் – ஷர்துல் தாகூரின் முதல் ஓவரில், கெயில் 2 ஃபோரும், ராகுல் ஒன்றும் அடித்தனர்.

ஓவர் 4.0 – 39/0 – 19 ரன்கள் – கிழிந்தது ஹர்பஜன் ஓவர் – கெயில் ஒரு சிக்ஸர் ஒரு ஃபோர் அடிக்க, ராகுல் மீண்டும் இரண்டு ஃபோர் அடித்தார்.

ஓவர் 3.0 – 20/0 – 5 ரன்கள் – இந்த முறை சஹார் கட்டுக்கோப்பாக பந்து வீச, ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடித்தார் ராகுல்.

ஓவர் 2.0 – 15/0 – 5 ரன்கள் – சொந்த மண்ணிற்கு திரும்பியுள்ள ஹர்பஜன் சிங் வீசும் முதல் ஓவர். முதல் பந்திலேயே கெயில் ஃபோர் அடித்தார். அதன்பின், ஹர்பஜன் சிறப்பாக வீசி, கெயிலை கட்டுப்படுத்தினார்.

ஓவர் 1.0 – 10/0 – 10 ரன்கள் – சஹார் வீசிய முதல் ஓவரில், லோகேஷ் ராகுல் இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.

Details

DateTimeLeagueSeason
15/04/20188:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversOutcome
பஞ்சாப்197720Win
சென்னை193520Loss

சென்னை