மும்பை vs சென்னை

Author: Praveen kumar | Posted Date : 07-04-2018 20:00 PM
vs

சென்னை சூப்பர் கிங்ஸ் won by 1 wickets

Recap

 

டப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் 2018ம் ஆண்டுக்கான முதல் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

தடை காரணமாக இரண்டு ஆண்டுகள் விளையாடாமல் இருந்த சென்னை அணி, பழைய உற்சாகத்துடன் களம் இறங்கியுள்ளது.

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா.
சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி.

இதுவரை இந்த இரு அணிகளும் 22 முறை மோதியுள்ளன. இதில், மும்பை அணி 12 முறையும், சென்னை அணி 10 முறையும் வெற்றிபெற்றுள்ளன. போட்டி நடக்கும் மும்பை மைதானத்தில் இதுவரை இரு அணிகளும் 7 முறை விளையாடி உள்ளன. இதில், மும்பை அணி ஏழு முறையும், சென்னை இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பேட்டிங் செய்யும்படி மும்பையை அழைத்தது. இதைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் ஏவின் லீவிசும் களம் இறங்கினர். வந்த வேகத்தில் லீவிஸ் பெவிலியன் திரும்பினார்.

முதல் டி.ஆர்.எஸ் மற்றும் டக் அவுட்

தொடக்க வீராக களம் இறங்கிய எவின், இரண்டு பந்துகளை எதிர்கொண்ட நிலையில் எல்.பி.டபிள்யு முறையில் அவுட் ஆனார். டி.ஆர்.எஸ் முறையில் இது அவுட் தானா என்று அப்பீல் செய்யப்பட்டது. அதிலும் அவுட் என்று அறிவிக்கப்படவே எவின் வெளியேறினார். இந்த ஐ.பி.எல் சீசனில் முதல் டக் அவுட் இவர்தான். இரண்டாவது டக் அவுட், எவினை வெளியேற்றிய சாகரேதான்.

கொஞ்ச நேரத்திலேயே ரோஹித்தும் நடையைகட்டினர். இதனால், பெரிய அளவுக்கு ரன் குவிக்க முடியாமல் மும்பை திணறியது.

கடைசி ஓவரை பிராவோ வீசினார். அப்போது மும்பை அணியில் பேட்டிங் செய்துகொண்டிருந்த ஹர்திக் பாண்டியா, பிராவோ பந்துகளை எதிர்கொள்ள தட்டு தடுமாறியுள்ளார். மேலும், பிராவோ வீசிய யார்க்கரில், நிலைகுலைந்து விழுந்தார். கடைசி பந்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ரன் எடுக்க ஓட முயற்சிக்கும் போது அப்படியே கீழே விழுந்தார். அவருக்கு சி.எஸ்.கே வீரர்கள் உதவி செய்தனர். கடைசியில் அந்த அணி, நான்கு விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது.

165 ரன் என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய சென்னைக்கு தொடக்கம் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை, ஷேன் வாட்சன் 16 ரன்னும், அம்பதி ராயுடு 22 ரன்னும் எடுத்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 4 ரன் மட்டுமே எடுத்தார். கேதர் ஜாதவ் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். வந்தவர்கள் எல்லாம் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.

நம்பிக்கை நட்சத்திரமாக வந்தார் பிராவோ. 30 பந்துகளில் 68 ரன் எடுத்து நம்பிக்கை கொடுத்தார். இதில், 7 சிக்சர்களும் அடங்கும். அதன்பிறகு அவர் அவுட் ஆகவே, சென்னை அணி வெற்றிபெறுமா என்று சந்தேகம் எழுந்தது. கடைசியில் ஜாதவ் மீண்டும் களம் கண்டார். இதனால், 19.5வது ஓவரில் 169 ரன் எடுத்து சென்னை திரில் வெற்றி பெற்றது.

சென்னையின் வெற்றிக்கு காரணமாக இருந்த பிராவோவுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது.

Details

DateTimeLeagueSeason
07/04/20188:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversBPOutcome
மும்பை1654200Loss
சென்னை169919.50Win

மும்பை

Batting RB4s6s
ரோஹித் சர்மாகே - ராயுடு, ப - வாட்சன்151811
ஏவின் லீவிஸ்எல்.பி.டபிள்யு சாகர்0200
இஷான் கிஷான்கே - உட், ப - தாஹிர்402941
சூரியகுமார் யாதவ்கே - சிங், ப - வாட்சன்432961
ஹர்திக் பாண்ட்யா அவுட் இல்லை222020
க்ருனால் பாண்ட்யா அவுட் இல்லை412252
கெய்ரன் பொல்லார்ட் 0000
முஸ்தாபிசுர் ரஹ்மான் 0000
மயங்க் மார்கண்டே 0000
ஜஸ்பிரீத் பும்ரா 0000
மிட்செல் மெக்லேனகன் 0000
Extras4
Total165    

சென்னை

Batting RB4s6s
ஷேன் வாட்சன்கே - லீவிஸ், ப - பாண்ட்யா161411
அம்பதி ராயுடுஎல்.பி.டபிள்யு மார்கண்டே221940
சுரேஷ் ரெய்னாகே - பாண்ட்யா, ப - பாண்ட்யா4600
கேதார் ஜாதவ் அவுட் இல்லை242212
எம்.எஸ். தோனிஎல்.பி.டபிள்யூ மார்கண்டே5500
ரவீந்திர ஜடேஜாகே - யாதவ், ப - ரஹ்மான்121310
ட்வயன் பிராவோகே - சர்மா, ப - பும்ரா683037
தீபக் சாஹர்ஸ்டெம்ப்- கிஷான், ப - மார்கண்டே0100
ஹர்பஜன் சிங்கே - பும்ரா, ப - மெக்லேனகன்8510
மார்க் வுட்கே - ரஹ்மான், ப - பாண்ட்யா1300
இம்ரான் தாஹிர் அவுட் இல்லை2200
Extras7
Total169